கோலாலம்பூர்: உள்நாட்டு பயனர்களின் மின்சார கட்டணங்களுக்கான கூடுதல் 942 மில்லியன் ரிங்கிட் தள்ளுபடிகளை அரசாங்கம் அறிவித்துள்ளது.
முன்னதாக அரசாங்கத்தின் பொருளாதார ஊக்கப் திட்டத்தின் போது அறிவிக்கப்பட்ட தெனகா நேஷனல் பெர்ஹாட் மின்சார கட்டணங்களில், தற்போதுள்ள தள்ளுபடிகளில் ‘பந்துவான் பிரிஹாதின் எலக்ட்ரிக் தம்பாஹான்’ கூடுதல் உதவியாக இருக்கும் என்று எரிசக்தி மற்றும் இயற்கை வளத்துறை அமைச்சர் டத்தோ டாக்டர் ஷாம்சுல் அனுவார் நசாரா தெரிவித்தார்.
நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையின் போது, மின்சாரக் கட்டணங்கள் அதிகரித்ததன் காரணமாக சுமையை குறைக்க இந்த மின்சாரம் உதவி வழங்கப்பட்டதாக அவர் கூறினார்.
300KWJ பயன்பாட்டைக் கொண்ட 4 மில்லியன் உள்நாட்டு பயனீட்டாளர் ஏப்ரல், மே மற்றும் ஜூன் மாதங்களுக்கு இலவச மின்சாரத்தை அனுபவிக்க உள்ளதாக அவர் கூறினார்.