Home One Line P1 நான்கு நாட்களுக்கு நீர் விநியோகத் தடை

நான்கு நாட்களுக்கு நீர் விநியோகத் தடை

801
0
SHARE
Ad

கோலாலம்பூர் : பெட்டாலிங், கிள்ளான், கோம்பாக், கோலாலம்பூர் மற்றும் கோலா லங்காட் ஆகிய 290 பகுதிகளில் மொத்தம் 420,000 பயனர்கள் ஜூலை 14 முதல் 17 வரை திட்டமிடப்பட்ட நீர் விநியோகத் தடைகளை சந்திக்க உள்ளனர்.

சிலாங்கூர் நீர் மேலாண்மை (ஆயர் சிலாங்கூர்) செயல்பாட்டுத் தலைவர் அபாஸ் அப்துல்லா கூறுகையில், சுங்கை சிலாங்கூர் நீர் சுத்திகரிப்பு நிலையம் கட்டம் 3- ஐ மேம்படுத்துவதால் இந்த இடையூறு ஏற்பட இருப்பதாகக் கூறினார்.

நீர் விநியோக குறுக்கீடு மற்றும் மீட்டெடுக்கும் காலம் பரப்பளவு, புவியியல் இருப்பிடம் மற்றும் வாடிக்கையாளர் வளாகங்களின் நிலை ஆகியவற்றிலும் மாறுபடும்.

#TamilSchoolmychoice

“பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நீர் விநியோக மறுசீரமைப்பு ஜூலை 15 (காலை 9) முதல் தொடங்கும். மேலும், பாதிக்கப்பட்ட அனைத்து பகுதிகளிலும் 48 விழுக்காடு ஜூலை 16 (காலை 9)- க்கு முன்னர் நீர் விநியோகம் இருக்கும் என்றும் நாங்கள் மதிப்பிடுகிறோம்.” என்று அவர் இன்று செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.

“பாதிக்கப்பட்ட பகுதிகளில் சுமார் 80 விழுக்காடு ஜூலை 17 அன்று மீண்டும் நீர் விநியோகம் செயல்படும். அதே நாளில் மாலை 5 மணிக்கு நீர் விநியோகம் முழுமையாக மீட்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ”என்று அவர் கூறினார்.

“நாங்கள் எட்டு உள்ளூர் சேவை மையங்களையும் திறந்து, பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு உதவ ஜூலை 16 மற்றும் 17 முதல் ஆறு பொது நீர் குழாய்களை வழங்குவோம்.” என்று அவர் கூறினார்.