அவர் கடைசியாக நடித்துள்ள, அறிமுக இயக்குநர் முகேஷ் சாப்ரா படமான ‘தில் பெச்சாரா’ படத்தின் முன்னோட்டக் காணொளி தற்போது வெளியாகி உள்ளது. இப்படத்துக்கு அசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார்.
இப்படத்தில் சஞ்சனா சங்கி கதாநாயகியாகவும், சைப் அலிகான், மிலிந்த் குனாஜி, ஜாவேத் ஜாப்ரி ஆகியோர் நடித்துள்ளனர்.
இப்படம் வெளியாவதற்கு முன்பாகவே சுஷாந்த் கடந்த ஜூன் 14-ஆம் தேதி தற்கொலை செய்துக் கொண்டார். 34 வயதான உச்ச நட்சத்திரம் இதுபோன்ற ஒரு விபரீத முடிவை எடுத்தது ஏன் என்பது குறித்து பெரும் விவாதம் இன்னமும் சமூகப் பக்கங்களில் பேசப்பட்டு வருகிறது.
இந்நிலையில், இத்திரைப்படம் ஜூலை 24-ஆம் தேதி OTTதளத்தில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கீழே இணைக்கப்பட்ட இணைப்பில் இப்படத்தின் முன்னோட்டத்தைக் காணலாம்: