Home One Line P2 தமிழக அமைச்சர்கள், பிரமுகர்களுக்கும் கொவிட்-19

தமிழக அமைச்சர்கள், பிரமுகர்களுக்கும் கொவிட்-19

640
0
SHARE
Ad

சென்னை: தமிழ் நாடு முழுவதிலும் தீவிரமாகப் பரவி வரும் கொவிட்-19 தொற்று சென்னையில் மிகக் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தியிருக்கிறது. அதைத் தொடர்ந்து தமிழக அமைச்சர்கள், பிரமுகர்கள் பலருக்கும் கொவிட்-19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

ஏற்கனவே, தமிழக சட்டமன்ற உறுப்பினர் திமுகவின் ஜெ.அன்பழகன் கொவிட்-19 தொற்றுக்குப் பலியானார்.

இதைத் தொடர்ந்து தற்போது தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவரது மனைவிக்கும் ஏற்கனவே கொவிட்-19 பாதிப்புக்குள்ளாகியிருந்தார் என்றும் ஊடகங்கள் தெரிவித்தன.

#TamilSchoolmychoice

உயர் கல்வித்துறை அமைச்சர் அன்பழகன், கொரோனா பாதிப்புக்குள்ளாகி, தனியார் மருத்துவமனையில், சிகிச்சை பெற்று வருகிறார் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.

முன்னாள் அமைச்சர் வளர்மதி, மின் துறை அமைச்சர் தங்கமணி, அவரது மகன் தரணிதரன் ஆகியோருக்கும் கொவிட்-19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இவர்களெல்லாம் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அமைச்சர்களுடன் தொடர்பில் இருந்தார் என்ற காரணத்தால் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் கொவிட்-19 பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார் என தமிழக ஊடகங்கள் தெரிவித்தன.

இதற்கிடையில் தமிழகத்தில் கொவிட்-19 தொற்று கண்டவர்களின் எண்ணிக்கை இன்று