Home One Line P1 சிலிம் சட்டமன்றத்தில் பிகேஆர் போட்டியிடும்

சிலிம் சட்டமன்றத்தில் பிகேஆர் போட்டியிடும்

492
0
SHARE
Ad

ஈப்போ: நேற்று புதன்கிழமை சிலிம் சட்டமன்ற உறுப்பினர் டத்தோ முகமட் குசாய்ரி அப்துல் தாலிப் மாரடைப்பால் காலமானார்.

அவரது மறைவை அடுத்து சிலிம் சட்டமன்றத்தில் பிகேஆர் தனது வேட்பாளரை நிறுத்த உள்ளது.

தங்களது வேட்பாளர் குறித்து பிகேஆர் அறிவிக்கும் என்று பேராக் பிகேஆர் தலைவர் பார்ஹாஷ் வாபா சால்வடோர் ரிசால் முபாராக் தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

“நான் மறைந்த சட்டமன்ற உறுப்பினர் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிக்கிறேன்.

“பிகேஆர் இப்பகுதியில் உள்ளூரைச் சேர்ந்த ஒருவரை தேர்தலில் நிறுத்தும். எதிர்க்கட்சியாக மக்கள் நலத்தை நாங்கள் தற்காப்போம்.” என்று ஓர் அறிக்கையின் வாயிலாக அவர் தெரிவித்தார்.

59 வயதான குசாய்ரி மாரடைப்பால் நேற்று காலமானார்.

நான்கு தவணைகளாக அவர் சிலிம் சட்டமன்ற உறுப்பினராக இருந்துள்ளார். கடந்த 2004-ஆம் ஆண்டில் இந்த சட்டமன்றத்தில் அவர் முதல் முறையாக வெற்றிக் கொண்டார். அடுத்த இரண்டு தவணைகளையும் அவர் தன் வசமாக்கிக் கொண்டார்.

கடந்த பொதுத் தேர்தலிலும் அவர் வெற்றிப் பெற்றார். ஆனால், அவருக்கு 44.8 விழுக்காட்டு வாக்குகள் மட்டுமே கிடைத்தன. பெர்சாத்து வேட்பாளருக்கு 33 விழுக்காடும், பாஸ் கட்சி வேட்பாளருக்கு 22 விழுக்காடு வாக்குகளும் கிடைத்தன.

சிலிம் சட்டமன்றம் பெரும்பாலும் மலாய்க்காரர்கள் வாழும் பகுதியாகும். இது தஞ்சோங் மாலிம் நாடாளுமன்றத் தொகுதியின் சட்டமன்றமாகும்.

இதற்கிடையில், தமது தரப்பிலிருந்து வேட்பாளரை நிறுத்துமா என்பதை இன்னும் முடிவு செய்யவில்லை என்று மார்சுகி யாஹ்யா தெரிவித்துள்ளார்.

“நாங்கள் இன்னும் பேசவில்லை. ஆனால், இது கடந்த தேர்தலில் பெர்சாத்து கட்சியால் போட்டியிடப்பட்டது.

“தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதும் நாங்கள் எங்கள் முடிவை அறிவிப்போம்,” என்று அவர் கூறினார்.

அவானா கென்திங் ஹைலேண்ட்ஸ் கோல்ப் அண்ட் கன்ட்ரி ரிசார்ட்டில் கோல்ப் விளையாடும் போது, 59 வயதான முகமட் குசாய்ரி திடீரென சரிந்து விழுந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.

முன்னதாக, நேற்று சட்டமன்ற உறுப்பினர் காலமானச் செய்தி மாநில, மத்திய அம்னோ தலைவர்களின் சமூக ஊடகப் பக்கங்கள் மூலம் பகிரப்பட்டன.