Home One Line P1 சிலிம் சட்டமன்ற உறுப்பினர் காலமானார்

சிலிம் சட்டமன்ற உறுப்பினர் காலமானார்

546
0
SHARE
Ad

ஈப்போ: சிலிம் சட்டமன்ற உறுப்பினர் டத்தோ முகமட் குசைரி அப்துல் தாலிப் இன்று பிற்பகல் பகாங் பெந்தோங்கில் காலமானார்.

அவர் தஞ்சோங் மாலிம் அம்னோ பிரிவுத் தலைவருமாவார்.

பேராக் அம்னோ தொடர்புக் குழுத் தலைவர் டத்தோ சாரணி முகமட் பெர்னாமாவைத் தொடர்பு கொண்டபோது இந்த விஷயத்தை உறுதிப்படுத்தினார். ஆனால், அவரிடம் மேலதிக தகவல்கள் இல்லை என்று கூறினார்.

#TamilSchoolmychoice

“உடல் இப்போது பெந்தோங் மருத்துவமனையில் உள்ளது, நான் அங்கு செல்கிறேன்,” என்று அவர் கூறினார்.

பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில், அவானா கென்திங் ஹைலேண்ட்ஸ் கோல்ப் அண்ட் கன்ட்ரி ரிசார்ட்டில் கோல்ப் விளையாடும்போது 59 வயதான முகமட் குசைரி திடீரென சரிந்து விழுந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, சட்டமன்ற உறுப்பினர் காலமானச் செய்தி மாநில மற்றும் மத்திய அம்னோ தலைவர்களின் சமூக ஊடக தளங்கள் மூலம் பகிரப்பட்டது.