இது குறித்து காவல் துறைத் தலைவர் டான்ஸ்ரீ அப்துல் ஹாமிட் பாடோர் தெரிவித்தார்.
சில அதிகாரிகள், பணியாளர்கள் ஆயிரக்கணக்கான ரிங்கிட்டுகளை தேர்வில் தேர்ச்சி பெறுவதற்காக மூன்றாம் தரப்பினருக்கு வழங்குவதாக அவர் கூறினார்.
4,000 முதல் 10,000 ரிங்கிட் வரை அவர்கள் பணம் செலுத்துவதாக காவல் துறைக்கு தகவல் கிடைத்ததாக அவர் குறிப்பிட்டார்.
“நான் இதை ஒருபோதும் பொறுத்துக்கொள்ள மாட்டேன். காவல் துறையின் உள்தேர்வுகளில் சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு தேர்ச்சி அளிக்க இலஞ்சம் வாங்கும் அதிகாரி அல்லது பணியாளர்களுக்கும் எதிராக நடவடிக்கை எடுப்பேன்.
“எனவே, பதவி உயர்வு தேர்வுகளின் முடிவுகளை மூன்றாம் தரப்பினர் அணுகுவதையும் மாற்றுவதையும் தடுக்க காவல் துறை ஒரு சிறப்பு அமைப்பை உருவாக்கும்” என்று அவர் புக்கிட் அமானில் பெர்னாமாவிடம் கூறினார்.
தேர்வு முடிவுகளை மாற்ற பொறுப்பற்ற நபர்களால் ஊடுருவதைத் தவிர்க்க இந்த அமைப்பு உயர் பாதுகாப்பு அம்சங்களைக் கொண்டிருக்க வேண்டும் என்று அவர் கூறினார்.
“சில ஆண்டுகளுக்கு முன்பு, ஒரு பயிற்சியாளர் சம்பந்தப்பட்ட இதே வழக்கில் அவர் தடுத்து வைக்கப்பட்டு, நடவடிக்கை எடுக்கப்பட்டது.” என்று அவர் தெரிவித்தார்.