Home One Line P1 அடுத்த தேர்தலில் நம்பிக்கைக் கூட்டணி வெல்லும்!- அன்வார் இப்ராகிம்

அடுத்த தேர்தலில் நம்பிக்கைக் கூட்டணி வெல்லும்!- அன்வார் இப்ராகிம்

518
0
SHARE
Ad

கோலாலம்பூர்: அடுத்த பொதுத் தேர்தலில் மக்களின் ஆணையை நம்பிக்கைக் கூட்டணி தொடர்ந்து பெறும் என்று பிகேஆர் தலைவர் அன்வார் இப்ராகிம் நம்பிக்கைக் கொண்டுள்ளார்.

தேசிய கூட்டணியின் பலவீனமான ஆளுகை மற்றும் சட்டம் 355 என்று அழைக்கப்படும் சிரியா நீதிமன்ற (குற்றவியல் அதிகார வரம்பு) சட்டம் 1965- இல் திருத்தம் குறித்த பாஸ் கட்சியின் சமீபத்திய நிலைப்பாடு இந்த வெற்றிக்கு முக்கிய காரணமாக இருக்கும் என்று அவர் கூறினார்.

முவாபாக்காட் நேஷனலின் கீழ் அம்னோ மற்றும் பாஸ் இடையேயான கூட்டணி தங்களுக்கு நன்மையைத் தரும் என்று அரசியல் பார்வையாளர்கள் நம்புவதாக அவர் கூறினார். ஏனெனில் இரு கட்சிகளும் பெற்ற வாக்குகளின் எண்ணிக்கை, 2018 தேர்தலில் நம்பிக்கைக் கூட்டணி பெற்ற ஆதரவின் அளவை விட அதிகமாக உள்ளது.

#TamilSchoolmychoice

“இது இரு கட்சிகளும் பெற்ற வாக்குகளின் ஒரு கருதுகோள் எண்ணிக்கை மட்டுமே. ஆனால், பொதுத் தேர்தல் கோலாலம்பூர் அல்லது கிளந்தானில் மட்டும் நடைபெறுவதல்ல, நாடு முழுவதும் நடத்தப்படுகிறது.

“சட்டம் 355- ஐ நடைமுறைப்படுத்த விரும்பியதால் பாஸ் மக்கள் கூட்டணியை விட்டு வெளியேறியது என்பதை மறந்துவிடாதீர்கள். ஆனால், அரசாங்கத்தில் ஒரு பகுதியாக மாறிய பின்னர், பாஸ் அமைச்சர்கள் அம்னோ மற்றும் மசீச ஆகியோரிடமிருந்து வரும் கருத்துகளையே பேசுகிறார்கள். இந்த திருத்தம் அரசியலமைப்பிற்கு எதிராக செல்லுபடியாகுமா என்பதை ஆய்வு செய்ய வேண்டும் என்று கூறுகிறார்கள்.

“பாஸ் தனது ஆதரவாளர்களுக்கு இதை எவ்வாறு விளக்க விரும்புகிறது. கட்சி 40 ஆண்டுகளாக போராடி வரும் விவகாரம் இது. ஆனால், இன்று அவர்கள் மென்மையாக இருக்கிறார்கள்? இதை பாஸ் எப்படி செய்ய அனுமதிக்க முடியும்?”

இந்த ஆண்டு இறுதியில் ஒரு பொதுத் தேர்தல் நடத்தப்படுவதற்கான வாய்ப்பை நிராகரிக்காத அன்வார், நம்பிக்கைக் கூட்டணி தயாராகி தொகுதிப் பேச்சுவார்த்தை பணியைத் தொடங்க வேண்டும் என்று கூறினார்.