Home One Line P1 அனிபா அமான் புதிய கட்சிக்கு தலைவரானார்!

அனிபா அமான் புதிய கட்சிக்கு தலைவரானார்!

895
0
SHARE
Ad

கோத்தா கினபாலு: முன்னாள் வெளியுறவு அமைச்சர் டத்தோஸ்ரீ அனிபா அமான் பார்ட்டி சிந்தா சபா (பிசிஎஸ்) தலைவராக நேற்று ஞாயிற்றுக்கிழமை (26 ஜூலை) பொறுப்பேற்றார்.

செப்டம்பர் 2018- இல் அம்னோவை விட்டு வெளியேறியதில் இருந்து கட்சி இல்லாமல் இருந்த அனிபா, பிசிஎஸ், கட்சியின் தலைவர் பதவியை வென்றார். அதன் முந்தைய தலைவர் டத்தோ வில்பிரட் பம்பூரிங் முன்னாள் முதல்வர் டான்ஸ்ரீ மூசா அமானின் தம்பியான அனிபா அமானுக்கு வழிவிட்டு இந்த பதவிக்கு போட்டியிடவில்லை.

பிசிஎஸ் உறுப்பினர்கள் ஞாயிற்றுக்கிழமை இங்குள்ள ஒரு தங்கும் விடுதியில் நடைபெற்ற கூட்டத்தின் போது கட்சியின் துணைத் தலைவராக பம்பூரிங்கிற்கு வாக்களித்தனர்.

#TamilSchoolmychoice

மற்றொரு முன்னாள் மத்திய அமைச்சர் டத்தோ எவோன் எபின் கட்சியின் தேர்ந்தெடுக்கப்பட்ட ஐந்து உதவித் தலைவர்களில் ஒருவராக நியமிக்கப்பட்டார்.

உறுப்பினர்கள் பிசிஎஸ் கட்சியை பார்ட்டி கெசெடாரான் ரக்யாத் சபா (பி.கே.ஆர்.எஸ்) என்று மறுபெயரிட வாக்களித்தனர். மேலும் கட்சியின் சின்னம், கொடியை மாற்றினர்.

கட்சியின் பொதுச்செயலாளர் அன்சாரி அப்துல்லாவின் கூற்றுப்படி, பிசிஎஸ் அரசியலமைப்பின் திருத்தங்களை சங்கப் பதிவாளர் ஒப்புதல் அளிக்கும் வரை கட்சி பிசிஎஸ் என்ற பெயரில் தொடர்ந்து செயல்படும் என்று கூறினார்.