தோக்கியோ: ஜப்பான் ஒகினாவா பகுதியில் அவசரகால நிலையை அறிவிக்கப்பட்டுள்ளது.
பிரபலமான சுற்றுலாத் தலமான அங்கு கொவிட்19 தொற்று சம்பவங்களின் எண்ணிக்கை அதிகமாக பதிவானதை அடுத்து, மக்கள் இரண்டு வாரங்கள் வீட்டிலேயே இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
ஆளுநர் டென்னி தமாகி வெள்ளிக்கிழமை, தெற்கு தீவின் மொத்த சம்பவங்களில் புதிய தினசரி சம்பவங்களைத் தொடர்ந்து அத்தியாவசியமற்ற பயணங்களைத் தவிர்க்குமாறு மக்களைக் கேட்டுக்கொண்டார்.
ஆகஸ்டு 15- ஆம் தேதி வரை “நாங்கள் அவசரகால நிலையை அறிவிக்கிறோம்” என்று தமாகி செய்தியாளர்களிடம் கூறினார்.
ஒகினாவா வெள்ளிக்கிழமை 71 புதிய கொவிட்19 தொற்று சம்பவங்களைப் பதிவுசெய்தது. மொத்தமாக அங்கு 395 சம்பவங்கள் பதிவாகி உள்ளன.