Home One Line P1 கொவிட்19: உள்நாட்டில் இருவருக்கு பாதிப்பு

கொவிட்19: உள்நாட்டில் இருவருக்கு பாதிப்பு

62
0
SHARE

கோலாலம்பூர்: மலேசியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 9 புதிய கொவிட்19 பாதிப்புகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

இதைத் தொடர்ந்து நாட்டின் மொத்த கொவிட்19 பாதிப்பு எண்ணிக்கை 8,985-ஆக உயர்ந்துள்ளது.

புதிதாக அடையாளம் காணப்பட்ட 9 சம்பவங்களில் 7பேர் வெளிநாட்டிலிருந்து நாட்டிற்கு திரும்பியவர்கள் ஆவர். உள்நாட்டில் 2 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இன்று மூவர் குணமடைந்து வீட்டிற்கு செல்ல அனுமதிக்கப்பட்ட நிலையில் குணமடைந்தோரின் எண்ணிக்கை 8,647 -ஆக உயர்ந்துள்ளது.

நாட்டில் மொத்தம் 213 பேர் இன்னும் மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இருவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைப் பெற்று வரும் நிலையில், ஒருவருக்கு சுவாசக் கருவி உதவி தேவைப்படுகிறது.

Comments