Home One Line P1 பினாங்கில் மைசெஜாதெரா குறுஞ்செயலி மட்டுமே பயன்படுத்தப்படும்!

பினாங்கில் மைசெஜாதெரா குறுஞ்செயலி மட்டுமே பயன்படுத்தப்படும்!

569
0
SHARE
Ad

ஜோர்ஜ் டவுன்: மத்திய அரசு ஏற்றுக்கொண்ட மைசெஜாதெரா குறுஞ்செயலிக்கு வழிவகுக்கும் வகையில், பினாங்கு தனது கொவிட்19 அடிப்படையிலான பிஜி-கேர் தொடர்பு தடமறிதல் செயலியை பயன்படுத்துவதை கைவிடும்.

மைசெஜாதெரா குறுஞ்செயலியிலிருந்த விவரங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும் என்ற புத்ராஜயாவின் முடிவுக்கு, மாநிலம் கட்டுப்படும் என்று முதல்வர் சௌ கோன் இயோ கூறினார்.

“மைசெஜாதேரா குறுஞ்செயலியைப் பயன்படுத்துவதில் பினாங்கு மக்கள் சிக்கலைச் சந்திக்க விரும்பவில்லை” என்று அவர் கூறினார்.

#TamilSchoolmychoice

மைசெஜாதெராவுக்கு முன்பு மாநிலத்தின் பிஜி-கேர் அமைப்பில், மே 15 முதல் பதிவுசெய்யப்பட்ட 36,521 பொது இடங்களில் இருந்து, 16.48 மில்லியன் பதிவுகள் இடம் பெற்றள்ளன.

இன்றுவரை, 1.35 மில்லியன் பயனர்கள் இந்த அமைப்பில் பதிவு செய்துள்ளனர்.

மைசெஜாதெராவுடன் இணைந்து பிற தடமறிதல் செயலிகளைப் பயன்படுத்த மத்திய அரசு அனுமதித்தபோதும், பிஜிகேர் ஏன் கைவிடப்பட்டது என்று கேட்கப்பட்டபோது, ​​ “ஒரே ஒரு பயன்பாட்டைப் பயன்படுத்துவது நல்லது.” என்று அவர் தெரிவித்தார்.

ஒவ்வொரு வளாகங்களும் மைசெஜாதெரா குறுஞ்செயலியைப் பயன்படுத்த வேண்டும் என்று தற்காப்பு அமைச்சர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாகோப் அண்மையில் தெரிவித்திருந்தார்.

ஆயினும், கூடுதல் பிற செயலிகளும் பயன்படுத்த அனுமதிக்கப்படுவதாக அவர் கூறினார்.