சென்னை: பாடகர் எஸ்பி பாலசுப்ரமணியம் கொவிட்19 தொற்றுக்கு ஆளாகி இருப்பதாக முகநூல் காணொளி வாயிலாகத் தெரிவித்துள்ளார்.
74 வயது இந்திய பின்னணி பாடகரான அவர் புதன்கிழமை காலை சென்னையில் உள்ள எம்ஜிஎம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
தனக்கு இருந்த ஒரே அறிகுறி சளி என்று அவர் கூறினார். இருப்பினும், கடந்த மூன்று நாட்களில் அவருக்கு மார்பு பிடித்தல் மற்றும் காய்ச்சல் இருந்ததாக அவர் குறிப்பிட்டார்.
“கடந்த இரண்டு, மூன்று நாட்களில் நான் கொஞ்சம் அசௌகரியத்தை அனுபவித்து வருகிறேன். சிறிய மார்பு பிடித்தல், பின்னர் குளிர் மற்றும் காய்ச்சல் ஏற்பட்டது. இந்த மூன்று விஷயங்களைத் தவித எந்த பிரச்சனையும் இல்லை. ஆனால், நான் அதை எளிதாக எடுத்துக் கொள்ள விரும்பவில்லை. எனவே, நான் மருத்துவமனைக்குச் சென்று சோதனை செய்தேன்.
“இது ஒரு இலேசான கொவிட்19 தொற்று என்று அவர்கள் சொன்னார்கள். நீங்கள் வீட்டிலேயே இருக்க முடியும் என்றும், உங்களை நீங்களே தனிமைப்படுத்திக் கொள்ளலாம் என்றும் சொன்னார்கள், ஆனால் நான் செய்யவில்லை அதைச் செய்ய விரும்பவில்லை. எல்லா குடும்பத்தினருடனும் இது செய்வது மிகவும் கடினமானதாகும். அவர்கள் மிகவும் அக்கறை கொண்டுள்ளனர். அவர்கள் உங்களைத் தனியாக விட்டுவிட முடியாது. எனவே, நான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டேன், ” என்று பாடகர் கூறினார்.