Home One Line P1 திடீர் தேர்தல் நடந்தால் தேர்தல் ஆணையத்திற்கு 1.2 பில்லியன் தேவைப்படும்

திடீர் தேர்தல் நடந்தால் தேர்தல் ஆணையத்திற்கு 1.2 பில்லியன் தேவைப்படும்

545
0
SHARE
Ad

கோலாலம்பூர்: தற்போதைய கொவிட்19 தொற்று காலத்தில் ஒரு பொதுத் தேர்தல் நடத்தப்பட்டால், தேர்தல் ஆணையத்திற்கு 1.2 பில்லியன் ரிங்கிட் தேவை என்று மக்களவையில் இன்று தெரிவிக்கப்பட்டது.

பிரதமர் துறை அமைச்சர் (நாடாளுமன்றம் மற்றும் சட்டம்) டத்தோ தக்கியுடின் ஹசான் கூறுகையில், கொவிட்19 பரவுவதைத் தடுக்க நிர்ணயிக்கப்பட்ட நிர்வாக நடைமுறைகளை கணக்கில் எடுத்துக்கொள்வதன் மூலம், இந்த தொகையானது எட்டப்படுவதாக அவர் கூறினார்.

“கொவிட்19 தொற்று இன்னும் இருக்கும் நிலையில் , நாட்டில் திடீர் தேர்தலை அரசாங்கம் நடத்தினால், 1.2 பில்லியன் செலவு தேவை என்று மதிப்பிடப்பட்டுள்ளது என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது” என்று அவர் இன்று தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

2019- ஆம் ஆண்டில் தேர்தல் ஆணையத்தால் பெறப்பட்ட 15 மில்லியன் ரிங்கிட்டில், கேமரன் மலை நாடாளுமன்ற இடைத்தேர்தல், சண்டாகான் நாடாளுமன்றம், தஞ்சோங் பியாய் நாடாளுமன்றம் மற்றும் செமினி மாநில சட்டமன்றம் ஆகிய ஐந்து இடைத்தேர்தல்களை செயல்படுத்த மொத்தம் 12,946,353.50 ரிக்கிட் செலவிடப்பட்டுள்ளது என்று அவர் கூறினார்.