Home One Line P1 மொகிதின்: ‘நாளை தேர்தல் நடப்பது போல செயலாற்ற வேண்டும்’

மொகிதின்: ‘நாளை தேர்தல் நடப்பது போல செயலாற்ற வேண்டும்’

653
0
SHARE
Ad

கோலாலம்பூர்: பொதுத் தேர்தல் நாளை நடப்பது போல, தேசிய கூட்டணி தலைவர்கள் உறுதியாக பணிப்புரிய வேண்டும் என்று பிரதமர் டான்ஸ்ரீ மொகிதின் யாசின் அழைப்பு விடுத்துள்ளார்.

இக்காலக்கட்டத்தில் ஒருவருக்கொருவர் தாக்கி பேசுவதை நிறுத்த வேண்டும் என்று அவர் கூறினார்.

தேசிய கூட்டணியில் உள்ள கட்சி உறுப்பினர்கள் ஒன்றுபட வேண்டும் என்று அவர் கூறினார். இது 15-வது பொதுத் தேர்தலில் வெற்றியை உறுதி செய்வதற்கான ஒரே வழியாகும் என்று அவர் தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

“எனவே, நாம் ஒன்று சேர்ந்து, மக்கள் நமக்கு ஆதரவளிப்பதை உறுதி செய்வதற்காக ஒருமைப்பாட்டுடன் நெருக்கமாக பணியாற்றுவோம்,” என்று கட்சியின் நான்காவது ஆண்டு விழாவின் கொண்டாட்டத்தில் அவர் உரையாற்றினார்.

15-வது பொதுத் தேர்தல் எப்போது நடைபெறும் என்று கேட்க வேண்டாம் என்று மொகிதின் உறுப்பினர்களுக்கு நினைவுபடுத்தினார்.

“முக்கியமானது என்னவென்றால், நாளை நடைபெறுவது போல் நாம் கடினமாக உழைக்க வேண்டும்” என்று அவர் கூறினார்.

தனது நிர்வாகத்தை பெர்சாத்து அல்லாத உறுப்பினர்களும் ஏற்றுக் கொண்டுள்ளனர் என்று மொகிதின் கூறினார். நாட்டை எவ்வாறு முன்னோக்கி கொண்டு வருவது என்று சிந்திக்க வேண்டிய நேரம் இது என்று கூறினார்.

“தேசிய கூட்டணி உள்ள எங்கள் சகாக்கள் அளித்த ஆதரவுக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். இது மாமன்னர் என்னை பிரதமராக நியமிக்க வழிவகுத்தது,” என்று அவர் கூறினார்.