Home One Line P1 சபா தேர்தல்: நீதிமன்ற முடிவை அனைத்து கட்சிகளும் ஏற்க வேண்டும்

சபா தேர்தல்: நீதிமன்ற முடிவை அனைத்து கட்சிகளும் ஏற்க வேண்டும்

446
0
SHARE
Ad

கோத்தா கினபாலு: சபா மாநில சட்டமன்றத்தைக் கலைப்பது தொடர்பான மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் முடிவை அனைத்து கட்சிகளும் ஏற்க வேண்டும் என்று ஷாபி அப்டால் தெரிவித்துள்ளார்.

ஜூலை 30-ஆம் தேதி சபா மாநில சட்டமன்றத்தை கலைப்பதில் சபா ஆளுநர் ஜூஹார் மஹிருடினின் முடிவு தொடர்பாக உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து 33 சட்டமன்ற உறுப்பினர்கள் கொண்டு வந்த மேல்முறையீட்டை நேற்று நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

சம்பந்தப்பட்ட தரப்பினரின் குரலைக் கேட்க நீதிமன்றம் ஒரு தளத்தை வழங்கியதாக ஷாபி அப்டால் தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

“இந்த முடிவின் மூலம், சபா மக்கள் தங்கள் பொறுப்பை நிறைவேற்றுவார்கள். சபா மாநிலத் தேர்தலில் யார் மாநிலத்தை ஆளுவார்கள் என்பதை முடிவு செய்வார்கள்” என்று அவர் தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்ட காணொளியில் தெரிவித்தார்.

மாநில சட்டமன்றத்தைக் கலைக்குமாறு ஷாபி அப்டால் மாநில ஆளுநர் ஜுஹாரைக் கேட்டுக் கொண்டதாகக் கூறி, 33 சட்டமன்ற உறுப்பினர்கள் அளித்த விண்ணப்பத்தை உயர்நீதிமன்றம் ஆகஸ்ட் 21-ஆம் தேதி தள்ளுபடி செய்தது.

தேர்ந்தெடுக்கப்பட்ட 33 சட்டமன்ற உறுப்பினர்களும் ஜூலை 29 அன்று மாநில சட்டமன்றத்தில் பெரும்பான்மையைக் கொண்டிருந்ததாகக் கூறினர்.

இந்த தீர்ப்பின் மூலம், மாநிலத் தேர்தல் திட்டமிட்டபடி தொடரும். தேர்தல் ஆணையம் செப்டம்பர் 12-ஆம் தேதி வேட்புமனு தாக்கல் செய்வதற்கும், செப்டம்பர் 26 தேர்தலுக்கான தேதியாகவும் அறிவித்துள்ளது.