Home One Line P1 மொகிதினுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தை பொதுவில் வெளியிட்ட மகாதீர்

மொகிதினுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தை பொதுவில் வெளியிட்ட மகாதீர்

674
0
SHARE
Ad

கோலாலம்பூர்: பிரதமர் மொகிதின் யாசினுக்கு எதிரான தன்னுடைய முன்மொழியப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானத்தை டாக்டர் மகாதிர் முகமட் தமது முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

இது குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க வாய்ப்பு வழங்கப்படாததால், தாம் அவ்வாறு செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டதாக அவர் கூறினார்.

தற்போதைய நிருவாகம் அரசாங்க விஷயங்களுக்கு முன்னுரிமை அளித்து, இரண்டு முறை தமது தீர்மானத்தை நிராகரித்ததாக அவர் குறிப்பிட்டார்.

#TamilSchoolmychoice

ஜசெக “மலாய்க்காரர்களை அழிப்பதை” தடுக்க ஒரு மலாய்-முஸ்லிம் அரசாங்கத்தை உருவாக்க அம்னோ மற்றும் பாஸ் உடன் இணைந்து பணியாற்ற மொகிதின் எடுத்த முடிவு உட்பட, தீர்மானத்திற்கான காரணத்தை அவர்  விளக்கியுள்ளார்.

“ஜசெக மலாய்க்காரர்களை அழிக்க முடியும் என்ற கூற்று அர்த்தமற்றது

“மலாய்க்காரர்களை அவ்வளவு எளிதில் அழிக்க முடியாது. மலாயன் யூனியன் மூலம் மலாய் நாடுகளை கைப்பற்ற (கட்டுப்படுத்த) ஆங்கிலேயர்கள் மேற்கொண்ட முயற்சிகள் மலாய்க்காரர்களால் நிறுத்தப்பட்டன, ” என்று அவர் கூறினார்.

ஜசெக மலாய்க்காரர்களை அழிக்க முயன்றால், அப்போதைய உள்துறை அமைச்சராக இருந்த மொகிதின், கட்சியையும் அதன் நடவடிக்கைகளையும் சட்டவிரோதமாக அறிவித்திருக்க முடியும் என்று அவர் குறிப்பிட்டார்.

நஜிப் ரசாக் தலைமையிலான நிர்வாகத்தை நிராகரித்த வாக்காளர்களுக்கு இது ஒரு துரோகம் என்பதால், அம்னோவுடன் சேர மொகிதினின் காரணத்தை ஏற்றுக்கொள்ள முடியாது என்று அவர் கூறினார்.

மொகிதின் பிரதமரானார் என்பது வெட்கக்கேடானது”

“இது மலேசியாவில் இதுவரை நடந்ததில்லை. தேசிய கூட்டணி அரசாங்கம் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒன்றல்ல என்பதை அவரே ஒப்புக் கொண்டார், ” என்று மகாதீர் கூறினார்.

முன்னாள் அம்னோ தலைவர்களை அவர் தலைவராக இருந்தபோது பெர்சாத்துவில் இணைய ஏற்றுக்கொண்டாலும், அது நிபந்தனைகளுக்கு உட்பட்டது என்று மகாதீர் கூறினார்.

“என் கட்சியைச் சேர்ந்தவர்கள் எதிரியான நஜிப்பைத் தேர்ந்தெடுத்து, என்னை நிராகரித்தது குறித்து வருத்தப்படுகிறேன்” என்று அவர் கூறினார்.

மொகிதின் தனது ஆதரவாளர்களுக்கு பதவிகளை வழங்குவதாகவும், அவரை எதிர்த்த பெர்சாத்து தலைவர்களை பதவி நீக்கம் செய்ததாகவும் மகாதீர் குற்றம் சாட்டினார். இது கட்சியின் விதிகளுக்கு எதிரானது என்றும் அவர் கூறினார்.

அரசாங்கத்துடன் தொடர்புடைய நிறுவனங்களிலிருந்து நிபுணர்களை நீக்குவது மற்றும் அவர்களுக்கு பதிலாக அரசியல்வாதிகளை நியமிப்பது குறித்தும் அவர் மேற்கோள் காட்டினார்.

பொதுத் தேர்தலுக்கு வழி விடாமல் மொகிதின் பிரதமராக நியமிக்கப்பட்டிருப்பது அரசியலமைப்பிற்கு எதிரானது என்றும், இது மக்கள் தேர்தல் முறை மீதான நம்பிக்கையை இழக்க வழிவகுக்கும் என்றும் லங்காவி நாடாளுமன்ற உறுப்பினருமான அவர் குறிப்பிட்டுளார்.

“மலேசியாவில் மக்களின் குரல்களுக்கு இனி மதிப்பு இல்லை என்பது தெளிவாகிறது, ஏனென்றால் மக்களால் நிராகரிக்கப்பட்ட கட்சி பின் கதவு வழியாக அரசாங்கத்தை உருவாக்க முடிகிறது

“தேசிய கூட்டணி அரசாங்கத்தின் அதிகாரத்தை சரியான (கட்சிக்கு) மீண்டும் வழங்க முன்மொழிகிறேன்,” என்று அவர் கூறினார்.