Home One Line P1 சபா தேர்தல்: தேசியக் கூட்டணி 29 தொகுதிகளில் போட்டி

சபா தேர்தல்: தேசியக் கூட்டணி 29 தொகுதிகளில் போட்டி

597
0
SHARE
Ad

கோத்தா கினபாலு: இன்று மாலை தேசிய கூட்டணி சபா மாநில தேர்தலுக்கான வேட்பாளர்களை இறுதியாக அறிவித்தது.

சபா பெர்சாத்து தலைவர் ஹாஜிஜி முகமட் நூர் 29 இடங்களில் தேசிய கூட்டணி போட்டியிடுவதாக அறிவித்தார். இந்த அறிவிப்பைத் தொடர்ந்து, குறைந்தபட்சம் மூன்று மாநில தொகுதிகளில் தேசிய முன்னணியுடன் தேசிய கூட்டணி மோதும் சூழல் ஏற்பட்டுள்ளது.

பாகினாதான் (பெர்சாத்துக்கு எதிராக அம்னோ), துலிட் (பிபிஆர்எஸ்-க்கு எதிராக ஸ்டார் ) மற்றும் சூக் (பிபிஆர்எஸ்-க்கு எதிராக ஸ்டார் ) இடையில் போட்டி நிலவுகிறது.

#TamilSchoolmychoice

தேசிய கூட்டணி அரசாங்கத்தின் ஒரு பகுதியாக இருக்கும் அனைத்து கூறுக் கட்சிகளும் தங்கள் வேட்பாளர்களை அறிவிக்கவில்லை என்பதால் மேலும் கூடுதல் மோதல் இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இன்று காலை 31 தொகுதிகளில் போட்டியிடுவதாக அம்னோ அறிவித்துள்ளது.

ஐந்து இடங்களில் கட்சி போட்டியிடும் என்று பிபிஆர்எஸ் அறிவித்துள்ளது.

தேசிய கூட்டணிக்கு பதிலாக தேசிய முன்னணி சின்னத்தின் கீழ் போட்டியிடுவதை உறுதிப்படுத்திய கட்சிகள் அம்னோ, பிபிஆர்எஸ் மற்றும் மசீச ஆகும்.

மொத்தத்தில், தேசிய முன்னணி குறைந்தது 36 இடங்களில் போட்டியிடும். தேசிய கூட்டணி 29 இடங்களில் போட்டியிடும். மசீச இன்று தங்கள் வேட்பாளரை அறிவிக்கும்போது இந்த எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும்.