Home One Line P1 மத்திய அரசுடன் ஒத்துப் போகும் அரசை தேர்ந்தெடுங்கள்- மொகிதின்

மத்திய அரசுடன் ஒத்துப் போகும் அரசை தேர்ந்தெடுங்கள்- மொகிதின்

517
0
SHARE
Ad

கோத்தா கினபாலு: நிர்வாக மற்றும் மேம்பாட்டு விஷயங்களுக்கு வசதியாக மத்திய அரசுக்கு இணையான சபா மாநில அரசை வாக்காளர்கள் தேர்வு செய்ய வேண்டும் என்று டான்ஸ்ரீ மொகிதின் யாசின் தெரிவித்தார்.

தேசிய கூட்டணி தலைமையிலான கட்சிகளுடன் இணைந்து சபா தலைமை செயல்பட்டால் அது மிகவும் புகழ்பெற்றதாக இருக்கும் என்று பிரதமர் கூறினார்.

“அரசாங்கத்தை தீர்மானிக்க எனக்கு உரிமை இல்லை. ஆனால், உங்களுக்கு உரிமை உண்டு. இத்தகைய சூழ்நிலையில், பல்வேறு விஷயங்களை சிறப்பாக நிர்வகிக்க முடியும் என்று கூறப்படும் ஓர் அரசாங்கத்தைத் தேர்ந்தெடுப்பதில் வாக்காளர்களின் புத்திசாலித்தனத்தை சபா மாநிலத் தேர்தல் சோதிக்கும் என்று நான் நினைக்கிறேன், ” என்று பிரதமர் இன்று இங்குள்ள மக்களுடன் நட்புரீதியான சந்திப்பில் உரையாற்றினார்.

#TamilSchoolmychoice

நூற்றுக்கணக்கான பங்கேற்பாளர்களுக்கு முன்னால் பேசிய பிரதமர், தொற்றுநோய்களின் போது நாட்டை நிர்வகிப்பதில் தற்போதைய தேசிய கூட்டணி அரசாங்கத்தின் அனுபவத்தையும் மொகிதின் பகிர்ந்து கொண்டார்.

அண்மையில், இதே போன்றதொரு கருத்தினை அம்னோ தலைவர் சாஹிட் ஹமிடி குறிப்பிட்டிருந்தார்.

தேசிய கூட்டணியின் தலைமையில் மத்திய அரசுடன் நேரடி உறவு வைத்திருக்கும் மாநில அரசால் மட்டுமே மாநிலத்தில் உள்ள மக்களின் நலனுக்கு உத்தரவாதம் அளிக்க முடியும் என்று அவர்  கூறியிருந்தார்.

“மக்களுக்கு வீடு வேண்டும், வேலை வேண்டும், உணவு வேண்டும். மக்கள் நல்ல உள்கட்டமைப்பை விரும்புகிறார்கள்”

“ஒரு சிறந்த அரசாங்கத்தை வழங்க, புத்ராஜெயாவுடன் நேரடியான தொடர்பில் இருக்க வேண்டும். இதுதான் தேசிய முன்னணியும் பிற கூட்டணிக் கட்சிகளின் பலம்” என்று அவர் கூறினார்.