Home One Line P1 மக்களை துயரத்திலிருந்து மீட்க ஐநா சீர்திருத்தத்தைக் கொண்டு வர வேண்டும்

மக்களை துயரத்திலிருந்து மீட்க ஐநா சீர்திருத்தத்தைக் கொண்டு வர வேண்டும்

597
0
SHARE
Ad

கோலாலம்பூர்: உலகெங்கிலும் உள்ள மோதல்களைத் தீர்ப்பதற்கும், மக்களை அவர்களின் துன்பத்திலிருந்து வெளியேற்றும் அம்சங்களை மேம்படுத்த ஐக்கிய நாடுகள் மன்றம் சீர்திருத்தப்பட வேண்டும் என்று தாம் நம்புவதாக பிரதமர் மொகிதின் யாசின் கூறினார்.

இன்று (மலேசிய நேரம்) ஐ.நா பொதுப் பேரவையில் தனது முதல் உரையில், மொகிதின், ஐ.நா சமூக மற்றும் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்துவதில் சிறப்பாக செயல்பட்டுள்ளது என்று கூறினார். ஆயினும், “அடுத்தடுத்த தலைமுறையினரை யுத்தத்தின் துன்பத்திலிருந்து காப்பாற்றுவதில்” தோல்வியுற்றது என்று குறிப்பிட்டார்.

ஐநா இப்போது முன்னெப்போதையும் விட, உலகம் எதிர்கொள்ளும் வெளிப்படையான சில பிரச்சனைகளுக்கு தீர்வுக் காண உறுப்பு நாடுகளின் தொடர்ச்சியான ஆதரவை சிறப்பாகக் கொண்டிருக்க வேண்டும் என்று அவர் கூறினார்.

#TamilSchoolmychoice

ஐ.நா தனது சாதனைகளை அடையாளப்படுத்தி கொள்ளவும், அதன் பலவீனங்களை மேம்படுத்துவதற்கும், அதன் தொடர்ச்சியான முன்னேற்றத்தைத் தடுக்கும் அனைத்து தடைகளையும் அகற்றுவதற்கும் இது சரியான நேரம் என்று தெரிவித்தார்.

கொவிட்19 தொற்றால், கண்டறியப்பட உள்ள தடுப்பூசி அனைத்து நாடுகளுக்கும் மக்களுக்கும் எந்தவிதமான பாகுபாடும் இன்றி அணுகுவதை உறுதி செய்ய வேண்டும் என்றும் அவர் கூறினார்.

“கொவிட்19 பாகுபாடின்றி தாக்குவதால், நாமும் அதனை நினைவில் கொண்டு செயல்பட வேண்டும்,” என்று அவர் கூறினார்.

இந்த கொடிய நச்சுயிரி பல உயிர்களை எடுத்துள்ளது மற்றும் சுகாதார அமைப்புகளின் உண்மையான திறன் மற்றும் செயல்திறனை அம்பலப்படுத்தியுள்ளது என்று மொகிதின் கூறினார்.

75 வது ஆண்டு நிறைவை நினைவுகூரும் வகையில் ஐநாவின் உயர்மட்டக் கூட்டத்தில், மொகிதின் புத்ராஜெயாவில் உள்ள தனது அலுவலகத்திலிருந்து காணொலி வழி பேசினார்.