Home One Line P2 கொவிட்19 தொற்றால் துணை நடிகர் மரணம்

கொவிட்19 தொற்றால் துணை நடிகர் மரணம்

657
0
SHARE
Ad

சென்னை: தமிழ் திரைப்பட துணை நடிகர் ரூபன் ஜெய் கொவிட்19 தொற்றால் காலமானார். அவர் நடிகர் விஜய் நடித்த ‘கில்லி’ மற்றும் விக்ரமின் ‘தூள்’ ஆகிய படங்களில் பிரபலமானார்.

‘கில்லி’ படத்தில் கபடி போட்டி நடுவர் வேடத்தில் நடித்த அவர், ‘தூள்’ படத்தில் டி.டி.ஆராக வருவார்.

சமீபத்தில்தான், நடிகர் புளோரண்ட் பெரேரா கொவிட்19- இல் சென்னையில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று, சிகிச்சைப் பலனளிக்காமல் மரணமுற்றார்.

#TamilSchoolmychoice

கொவிட்19 பாதிப்பினால் உலகம் முழுதும் இது ஒரு மோசமான ஆண்டாகக் கொள்ளப்பட்டாலும், தமிழ் திரைப்பட உலகம் கிட்டத்தட்ட ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு மாதமும் கவலையான செய்திகளைப் பெற்று வருகிறது.

ரூபன் ஜெய்க்கு, பிரபல திரைப்பட பிரபலங்கள் தங்கள் அஞ்சலிகளைப் பகிர்ந்துகொண்டுள்ளனர். சமூக ஊடகங்களில் இரசிகர்களும், மூத்த நடிகர்களும் அவருக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.