கோத்தா கினபாலு: சபா மாநிலத் தேர்தலில் பார்ட்டி பெர்சாத்து சபா (பிபிஎஸ்) இரண்டு தொகுதிகளில் போட்டியிடுவதிலிருந்து விலகி உள்ளது.
காபுங்கான் ராக்யாத் சபா (ஜிஆர்எஸ்) கூட்டணிக்குள், உள் மோதல்களைத் தவிர்ப்பதற்காக பிங்கோர் மற்றும் தம்புனான் தொகுதிகளிலிருந்து விலகுவதாக பிபிஎஸ் தெரிவித்துள்ளது.
அந்த தொகுதிகளுக்கு பரிந்துரைக்கப்பட்ட பிபிஎஸ் வேட்பாளர்கள் முறையே பீட்டர் ஜினோ அலியன் மற்றும் சில்வெரியஸ் புருனோ.
சபா ஸ்டார் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் ஜெப்ரி கிட்டிங்கன் மற்றும் பிபிஎஸ் பொதுச்செயலாளர் டத்தோ சாஹிம் சாஹித் ஆகியோருக்கு இடையில் ஓர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதை பார்வையிட்டதை அடுத்து, தேசிய கூட்டனி பொதுச் செயலாளர் டத்தோஸ்ரீ ஹம்சா சைனுடின் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.
இதே போன்று, பெங்கோகா (பிரன்சோல் டையிங்) மற்றும் அபி-அபி (மார்செல் ஜூட்) ஆகிய தொகுதிகளில் நிறுத்தப்படுவதாக இருந்த ஸ்டார் கட்சி சுயேச்சை வேட்பாளர்களை திரும்பப் பெறுவதாக ஜெப்ரி கூறினார்.
வருகிற சனிக்கிழமை (செப்டம்பர் 26) நடைபெறும் தேர்தலில், 17 தொகுதிகளில் ஜி.ஆர்.எஸ் கட்சிகளுக்கு இடையில் நேரடியாக போட்டிகள் நிலவுவதால், பேச்சுவார்த்தைகளின் விளைவாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.