Home One Line P1 கொவிட்19: புதிதாக 82 சம்பவங்கள்- 168 பேர் குணமடைந்தனர்

கொவிட்19: புதிதாக 82 சம்பவங்கள்- 168 பேர் குணமடைந்தனர்

436
0
SHARE
Ad

கோலாலம்பூர்: சுகாதார அமைச்சகம் இன்று 82 புதிய கொவிட்19 நோய்த் தொற்றுகளை அறிவித்துள்ளது. அவற்றில் 72 சம்பவங்கள் உள்ளூர் பரவல்கள் ஆகும். 10 சம்பவங்கள் இறக்குமதி சம்பவங்களாகும்.

இப்புதிய நோய்த்தொற்றுகள் மூலம் மொத்த கொவிட்19 நோய்த்தொற்றுகளின் எண்ணிக்கை 10,358 – ஆக உயர்ந்துள்ளது.

சபாவில் மட்டும் 60 நோய்த்தொற்றுகள் பதிவாகியுள்ளன. இதில் 37 பேர் மலேசியர்கள். 23 பேர் வெளிநாட்டினர். கெடாவில் 10 பேரும், சிலாங்கூர், சரவாக்கில் தலா ஒருவரும் இத்தொற்றுக்கு ஆளாகி உள்ளனர்.

#TamilSchoolmychoice

இறப்பு எண்ணிக்கை தொடர்ந்து 130 -ஆக உள்ளது.

168 பேர் குணமடைந்து வெளியேற்றப்பட்டுள்ள நிலையில், மொத்தமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 9,563- ஆக உள்ளதாக சுகாதார இயக்குநர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா தெரிவித்தார்.

தற்போது 665 பேர் இன்னமும் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். ஒன்பது நோயாளிகள் தீவிர சிகிச்சை பிரிவுகளில் உள்ளனர். இரண்டு பேருக்கு சுவாசக் கருவி உதவி தேவைப்படுகிறது.