Home One Line P1 அம்னோ அரசியல் பிரிவு சந்திப்பை நடத்தும்

அம்னோ அரசியல் பிரிவு சந்திப்பை நடத்தும்

483
0
SHARE
Ad

கோலாலம்பூர்: நாட்டின் சமீபத்திய அரசியல் நிலைமை உள்ளிட்ட தற்போதைய பிரச்சனைகள் குறித்து விவாதிக்க அம்னோ இன்று இரவு கட்சியின் அரசியல் பிரிவு கூட்டத்தை நடத்தும்.

இந்த விஷயத்தை அம்னோவின் உயர் தலைவர்கள் உறுதிப்படுத்தினர்.

“ஆம், இன்றிரவு இரவு 8 மணிக்கு அம்னோ அரசியல் பணியகத்தின் கூட்டம் உள்ளது.

#TamilSchoolmychoice

“நாட்டின் தற்போதைய அரசியல் நிலைமை குறித்தும் இது விவாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது,” என்று அவர்கள் கூறியுள்ளனர்.

முன்னதாக, தமக்கு கிடைத்த பெரும்பான்மையான ஆதரவை மாமன்னர் அல்-சுல்தான் ரியாதுடின் முன்னிலையில் முன்வைத்ததாக பிகேஆர் அன்வார் இப்ராகிம் தெரிவித்திருந்தார்.

வருகிற இரண்டு மூன்று நாட்களில் மாமன்னர் அனைத்து கட்சித் தலைவர்களையும் அழைக்க இருப்பதாக அவர் கூறினார்.

ஆயினும், இது தொடர்பாக வெளியிட்ட ஓர் அறிக்கையில், அன்வார் இப்ராகிம் மாமன்னரிடம் எண்ணிக்கையைத் தவிர மக்களவை உறுப்பினர்களின் பெயர்களை வெளியிடவில்லை என்று தெரிவித்திருந்தார் என்று இஸ்தான நெகாரா தெரிவித்திருந்தது.