Home One Line P2 உலகளவில் காற்று மாசுபாட்டிற்கு இந்தியா, சீனா, இரஷ்யாவே காரணம்!

உலகளவில் காற்று மாசுபாட்டிற்கு இந்தியா, சீனா, இரஷ்யாவே காரணம்!

458
0
SHARE
Ad

வாஷிங்டன்: உலகில் காற்று மாசுபாட்டிற்கு இந்தியா, சீனா , இரஷ்யா போன்ற  நாடுகள்தான் காரணம் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கூறியுள்ள்ளார்.

மாசுக் கட்டுப்பாட்டில் டொனால்டு டிரம்ப் கவனம் செலுத்தவில்லை என குற்றம்சாட்டைத் தொடர்ந்து அவர் இந்த கூற்றினை வெளியிட்டுள்ளார்.

உலகளவில் காற்று மாசுக்கு இந்தியா, சீனா, இரஷ்யா ஆகிய நாடுகள்தான் முக்கிய காரணம் எனவும், அமெரிக்காவின் சுற்றுச்சூழல் நிலவரம் சிறப்பாக இருப்பதாகவும்  அவர் தெரிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice

அமெரிக்காவில் நவம்பர் 3- ஆம் தேதியன்று அதிபர் தேர்தல் நடைபெறவிருக்கிறது. இதில் டொனால்டு டிரம்ப் மீண்டும் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து ஜோ பைடன் போட்டியிடுகிறார்.

“சுற்றுச்சூழல், ஓசோன் என எல்லாவற்றின் விவகாரத்திலும் அமெரிக்கா சிறப்பாக செயல்பட்டு முதலிடத்தில் இருக்கிறது. இந்தியா, இரஷ்யா, சீனா ஆகிய நாடுகள் காற்றை மோசமாக மாசுபடுத்தி வருகின்றன.” என்று அவர் ஒரு பிரச்சாரக் கூட்டத்தில் கூறினார்.