Home One Line P1 செல்லியல் காணொலி : “கண்ணதாசனும் மலேசியாவும்” எம்.சரவணன் சிறப்புரை

செல்லியல் காணொலி : “கண்ணதாசனும் மலேசியாவும்” எம்.சரவணன் சிறப்புரை

1046
0
SHARE
Ad

செல்லியல் காணொலி | “கண்ணதாசனும் மலேசியாவும்” டத்தோஸ்ரீ எம்.சரவணன் சிறப்புரை | Datuk Seri M.Saravanan shares his memories on Kannadasan | 17 Oct 2020

இன்று அக்டோபர் 17-ஆம் நாள் மறைந்த கவியரசர் கண்ணதாசனின் நினைவு நாள்.

மலேசியாவுக்கு பலமுறை வந்து இருக்கும் கண்ணதாசன் இங்கு பல நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டு எழுச்சிமிகு உரையாற்றி மக்களை மகிழ்வித்திருக்கிறார்.

#TamilSchoolmychoice

தனது பாடல்களாலும், கவிதைகளாலும், இலக்ககியப் படைப்புகளாலும் தமிழர்களின் உணர்வுகளோடும் வாழ்க்கையோடும் இன்றுவரை  இரண்டறக் கலந்திருக்கிறார்.

நமது நாட்டின் பெருமைகளையும், மலேசியப் பிரமுகர்களின் சிறப்புகளையும், ஆலயங்கள், மக்கள் குறித்தும் கண்ணதாசன் பல பாடல்களிலும் கவிதைகளிலும் விவரித்திருக்கிறார்.

அவர் மறைவுக்குப் பின்னர் எத்தனையோ நாடுகளில் அவருக்காக விழாக்களும் சிறப்பு நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டிருக்கின்றன.

இருப்பினும் தொடர்ந்து 32 ஆண்டுகளாக ஒவ்வொரு ஆண்டும் கண்ணதாசன் விழா எடுத்து அவரை நினைவு கூர்ந்து கொண்டாடும் நாடு – உலகிலேயே மலேசியா ஒன்றுதான்!

ஆண்டுதோறும் தவறாமல் கண்ணதாசனுக்கு விழா எடுக்கும் கண்ணதாசன் அறவாரியத்தின் தலைவராகச் செயல்படுகிறார் மனிதவள அமைச்சர் டத்தோஸ்ரீ எம் சரவணன். கவியரசர் மீது கொண்டிருக்கும் அபிமானம் காரணமாகவும், அவரது கவிதைகள் மீது கொண்ட தீராத காதல் காரணமாகவும் கண்ணதாசன் விழாவை நமது நாட்டில் தொடர்ந்து சிறப்புறக் கொண்டாடி வருகிறார்.

கண்ணதாசன் கவிதைகள் மீது தனக்கு ஏற்பட்ட ஆர்வம் குறித்தும் கண்ணதாசன் விழா குறித்தும் செல்லியல் காணொலி தளத்திற்காக சரவணன் வழங்கியிருக்கும் சிறப்புரையை மேற்கண்ட இணைப்பில் காணலாம்.

தொடர்புடைய முந்தைய காணொலி :

செல்லியல் பார்வை காணொலி : “மலேசியாவில் கண்ணதாசன் ” – சில நினைவுகள்