Home One Line P1 கோலாலம்பூர், புத்ராஜெயா, சிலாங்கூரில் நிபந்தனைக்குட்பட்ட கட்டுப்பாட்டு உத்தரவு 14 நாட்களுக்கு நீட்டிப்பு

கோலாலம்பூர், புத்ராஜெயா, சிலாங்கூரில் நிபந்தனைக்குட்பட்ட கட்டுப்பாட்டு உத்தரவு 14 நாட்களுக்கு நீட்டிப்பு

481
0
SHARE
Ad

கோலாலம்பூர்: கோலாலம்பூர், புத்ராஜெயா மற்றும் சிலாங்கூரில் நிபந்தனைக்குட்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவு நவம்பர் 9 வரை, மேலும் 14 நாட்களுக்கு நீட்டிக்கப்படும் என்று புத்ராஜெயா இன்று அறிவித்தது.

முந்தைய 14 நாட்களில் நிபந்தனைக்குட்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை இருந்தபோதிலும் கொவிட் -19 நோய்த்தொற்றுக்கான ஆபத்து குறையவில்லை என்று சுகாதார அதிகாரிகள் கண்டறிந்ததையடுத்து இந்த முடிவு எட்டப்பட்டதாக தற்காப்பு அமைச்சர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாகோப் தெரிவித்தார்.

“இந்த அபாயத்தை கணக்கில் எடுத்துக்கொண்டு, கோலாலம்பூர், புத்ராஜெயா மற்றும் சிலாங்கூரில் உள்ள நிபந்தனைக்குட்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையை அக்டோபர் 27 முதல் நவம்பர் 9 வரை மேலும் 14 நாட்களுக்கு நீட்டிக்க அரசாங்கம் ஒப்புக் கொண்டுள்ளது” என்று இஸ்மாயில் சப்ரி இங்கு செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.