Home One Line P2 இந்தியாவை அசிங்கம் என்று கூறிய டிரம்பை சாடிய ஜோ பைடன்!

இந்தியாவை அசிங்கம் என்று கூறிய டிரம்பை சாடிய ஜோ பைடன்!

765
0
SHARE
Ad

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தலுக்கு இன்னும் சில வாரங்களே உள்ள நிலையில், அதிபர் டொனால்டு டிரம்ப் மற்றும் ஜோ பைடன் இருவருக்கும் இடையேயான இறுதி நேரடி விவாதம் இரு தினங்களுக்கு முன்னர் நடைபெற்றது.

அப்போது, பேசிய டிரம்ப் மீண்டும் பருவநிலை மாற்றம் பிரச்சனையில் சீனா, இந்தியா, ரஷ்யா ஆகிய நாடுகள் காற்று மாசுபாடு காரணமாக அசிங்கமாக இருக்கின்றன என்று கூறினார்.

இந்தியாவுக்கு வருகை புரிந்த போது அதன் அசிங்கம் அவருக்கு தெரியவில்லையா என்ற கண்டனக் குரல்கள் அவருக்கு எதிராக எழுந்து வருகின்றன.

#TamilSchoolmychoice

அமெரிக்காவில் வருகிற நவம்பர் மாதம் 3- ஆம் தேதி அதிபர் தேர்தல் நடைபெறவுள்ளது.

அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான கருத்துக் கணிப்பில் ஜோ பைடன் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளார். டொனால்டி ட்ரம்ப்பை விட சுமார் 9.8 விழுக்காடு முன்னிலையில் ஜோ பைடன் உள்ளார்.

இது குறித்து பேசிய ஜோ பைடன், “நமது நண்பர்களை பற்றி நீங்கள் இப்படி பேசக் கூடாது. பருவநிலை மாற்றம் போன்ற உலகளாவிய சவால்களை உங்களை போன்று தீர்க்கக் கூடாது” என்று டொனால்டு ட்ரம்ப்பை விமர்சித்துள்ளார்.

கமலா ஹாரிஸும் நானும் நட்பு நாடுகளுடனான உறவை ஆழமாக மதிக்கிறோம். வெளியுறவுக் கொள்கையில் மரியாதை செலுத்துவோம் என்றும் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.