Home One Line P2 இந்தியா முழுவதும் பட்டாசு வெடிக்க தடை விதிக்கப்படுமா?

இந்தியா முழுவதும் பட்டாசு வெடிக்க தடை விதிக்கப்படுமா?

604
0
SHARE
Ad

சென்னை: தீபாவளி பண்டிகையின் போது ராஜஸ்தான் மாநிலத்தில் பட்டாசுகள் விற்கவும், வெடிக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது தமிழகத்திலும் இது நடைமுறைக்கு வரும் என்று கூறப்படுகிறது.

வருகிற 14- ஆம் தேதி தீபாவளிப் பண்டிகை கொண்டாடப்பட இருக்கும் நிலையில், அண்மைக்காலமாக சுற்றுச்சூழல் நலன் கருதி பட்டாசு வெடிப்பதற்கு சில மாநிலங்களில் தடை விதிக்கப்பட்டு வருகிறது.

இதனிடையே, நாடு முழுவதும் வருகிற 7-ஆம் தேதி முதல் 30-ஆம் தேதி வரை பட்டாசு வெடிப்பதற்கு தடை விதிக்கலாமா என்று, தேசிய பசுமைத் தீர்ப்பாயம் மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சகத்திற்கு கடிதம் அனுப்பியுள்ளதாகக் கூறப்படுகிறது.

#TamilSchoolmychoice

கொவிட்-19 தொற்றைக் காரணமாக பட்டாசு வெடிக்க ராஜஸ்தான் மாநில அரசு தடை போட்டிருப்பது வேதனைக்குரியது என்று திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

“கொவிட்-19 தொற்றால் ஏற்கனவே பட்டாசுத் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. பட்டாசு தயாரிப்பாளர்களும் பொருளாதார ரீதியாகவும், வியாபார ரீதியாகவும் தடுமாற்றத்தில் சிக்கித் தவிக்கிறார்கள். இப்படியொரு துயரம் மிகுந்த சூழலில், தீபாவளிப் பண்டிகைதான் அவர்களுக்கு ஓர் ஆறுதலாக இருக்கிறது,” என்று ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.