கோலாலம்பூர்: நிபந்தனைக்குட்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையை விதிக்குமாறு அரசாங்கத்திற்கு அறிவுறுத்துவதற்கு முன்பு, சம்பந்தப்பட்ட பகுதி கொவிட் -19 சிவப்பு மண்டலமாக மாறும் வரை சுகாதார அமைச்சகம் காத்திருக்காது என்று தெரிவித்துள்ளது.
கொவிட் -19 பரவுவதை பதிவு செய்யும் இடங்களில் இயக்கத்தை மட்டுப்படுத்த வேண்டியதன் அவசியத்தை தீர்மானிக்க சுகாதார நிபுணர்களால் இடர் மதிப்பீட்டை சுகாதார அமைச்சு மேற்கொள்கிறது என்று அதன் இயக்குனர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா தெரிவித்தார்.
“இன்று நாங்கள் ஆரஞ்சு மண்டலத்தை அறிமுகப்படுத்தியுள்ளோம். சிவப்பு மண்டலமான பிறகு கட்டுப்பாடுகளை அறிவிக்க நாங்கள் காத்திருக்க விரும்பவில்லை.
“தற்போது, 21 சம்பவங்கள் மற்றும் அதற்கு மேல் நாங்கள் மதிப்பீட்டை நடத்துவோம். மதிப்பீடு அதிக ஆபத்து என்று சொன்னால், நாங்கள் நிபந்தனைக்குட்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டை விதிக்க அறிவுறுத்துவோம்,” என்று அவர் புத்ராஜெயாவில் செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.
முன்னதாக, சுகாதார அதிகாரிகள் பச்சை, மஞ்சள் மற்றும் சிவப்பு ஆகிய மூன்று வண்ண குறியீடுகளை மட்டுமே பயன்படுத்தினர்.