Home One Line P1 2021 வரவு செலவு திட்டம் மாலை 4 மணிக்கு தாக்கல் செய்யப்படும்

2021 வரவு செலவு திட்டம் மாலை 4 மணிக்கு தாக்கல் செய்யப்படும்

568
0
SHARE
Ad

கோலாலம்பூர்: அனைவரும் எதிர்பார்த்த 2021 ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் இன்று வெள்ளிக்கிழமை (நவம்பர் 6) நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படுகிறது. இதன் நேரடி ஒளிபரப்பு ஆர்டிஎம் தொலைக்காட்சியில் இடபெறும். நிதிய்மைச்சர் தெங்கு ஜாப்ருல் அசிஸ் வரவு செலவு திட்டத்தை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்வார்.

இதனிடையே, இன்று முதல் நாடாளுமன்ற அமர்வில் 80 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மட்டுமே ஒரே நேரத்தில் பங்கேற்க அனுமதிக்கப்படுவர் என்று நேற்று மக்களவை சபாநாயகர் அசார் அசிசான் தெரிவித்திருந்தார்.

கொவிட் -19 தொற்று பரவுவதைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக இது கருதப்படுகிறது.

#TamilSchoolmychoice

அரசாங்கத்தைச் சேர்ந்த 41 நாடாளுமன்ற உறுப்பினர்களும், எதிர்க்கட்சி மற்றும் சுயேச்சை நாடாளுமன்ற உறுப்பினர்கள் 39 பேரும் இந்த அமர்வில் கலந்து கொள்வர்.

இது குறித்து கேள்வி எழுப்பிய எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்.எஸ்.என் ராயருக்கு பதிலளித்த அசார், நேற்று நடைபெற்ற கூட்டத்தில் கலந்து கொண்ட கட்சித் தலைவர்களிடையே இது ஒருமனதாக எடுக்கப்பட்ட முடிவு இது என்று மீண்டும் வலியுறுத்தினார்.

“இந்த 80 பேரில், தற்போதைய மக்களவை பெரும்பான்மையை பிரதிபலிக்க 41 (அரசு), 39 (எதிர்க்கட்சி) ஒப்புக்கொள்கிறோம். இது விவாதத்தின் போது மட்டுமே செயல்படுத்தப்படுகிறது.

“ஆனால், வாக்களிக்க விதிக்கப்பட்டிருந்தால், நாங்கள் இரண்டு நிமிடங்களுக்கு மணி ஒலிக்க ஒப்புக் கொண்டோம். மக்களவைக்கு வெளியே இருக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் வந்து வாக்களிக்க முடியும் 10 நிமிடங்களுக்கு இது நீட்டிக்கப்படும்,” என்று அவர் கூறியிருந்தார்.