Home One Line P1 நவ.6 தொடங்கி நாடாளுமன்றத்தில் 80 உறுப்பினர்கள் மட்டுமே அமர்வில் அனுமதிக்கப்படுவர்

நவ.6 தொடங்கி நாடாளுமன்றத்தில் 80 உறுப்பினர்கள் மட்டுமே அமர்வில் அனுமதிக்கப்படுவர்

635
0
SHARE
Ad

கோலாலம்பூர்: நாளை வெள்ளிக்கிழமை (நவம்பர் 6) முதல் நாடாளுமன்ற அமர்வில் 80 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மட்டுமே ஒரே நேரத்தில் பங்கேற்க அனுமதிக்கப்படுவர்.

கொவிட் -19 தொற்று பரவுவதைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக இது கருதப்படுகிறது.

அரசாங்கத்தைச் சேர்ந்த 41 நாடாளுமன்ற உறுப்பினர்களும், எதிர்க்கட்சி மற்றும் சுயேச்சை நாடாளுமன்ற உறுப்பினர்கள் 39 பேரும் இந்த அமர்வில் கலந்து கொள்வர்.

#TamilSchoolmychoice

அமர்வில் பங்கேற்கும் நாடாளுமன்ற உறுப்பினர்களை,  அந்தந்த கட்சிகள்  தீர்மானிக்கும் என்று மக்களவை சபாநாயகர் அசார் அசிசான் ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.

மேலும் கலந்துகொள்ளும் நபர்களுக்கு வருகை பதிவு செய்ய சிறப்பு அட்டை வழங்கப்படும்.

நேற்று நடைபெற்ற கொவிட் -19 தொற்றுநோய் பாதிப்பு சம்பந்தமாக  கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.