Home One Line P1 பைபிள் குறித்த சர்ச்சைக்குரிய கருத்துக்காக பாஸ் நாடாளுமன்ற உறுப்பினர் மன்னிப்பு

பைபிள் குறித்த சர்ச்சைக்குரிய கருத்துக்காக பாஸ் நாடாளுமன்ற உறுப்பினர் மன்னிப்பு

642
0
SHARE
Ad

கோலாலம்பூர்: பாசிர் புத்தே நாடாளுமன்ற உறுப்பினர் நிக் முகமட் சவாவி நிக் சல்லே மது அருந்துதல் மற்றும் நான்கு மாதங்களுக்கு முன்பு செய்த பைபிள் குறித்த சர்ச்சைக்குரிய கருத்துக்களுக்காக நேற்று நாடாளுமன்றத்தில் மன்னிப்பு கேட்டுக் கொண்டார்.

எதிர்க்கட்சியின் அழுத்தம் இருந்தபோதிலும் ஆகஸ்ட் மாதத்தில் பாஸ் நாடாளுமன்ற உறுப்பினரான அவர் அவ்வாறு செய்ய மறுத்துவிட்டார்.

“எனவே, யாராவது மனதளவில் காயமடைந்திருந்தால் நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். அது எனது நோக்கம் அல்ல. நான் செய்ய விரும்பிய விஷயம் என்னவென்றால், இயேசுவுக்கு வெளிப்படுத்தப்பட்ட பைபிளின் அசல் வடிவத்தை எந்த மாற்றங்களும் இன்றி பாதுகாப்பதே,” என்று சபாநாயகர் டத்தோ அசார் மன்னிப்பு கேட்க உத்தரவிடப்பட்ட பின்னர், நிக் முகமட் சவாவி மக்களவையில் இவ்வாறு தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

குடிபோதையில் வாகனம் ஓட்டிய குற்றவாளிகளுக்கு அதிக அபராதம் விதிக்க சாலை போக்குவரத்து (திருத்தம்) மசோதா 2020 தொடர்பான விவாதத்தின் போது முந்தைய நாடாளுமன்ற அமர்வின் போது பைபிள் குறித்து நிக் முகமட் சவாவி கருத்துரைத்திருந்தார்.

அவர் மதங்களை ஒப்பிட்டு ஆய்வு செய்ததாகக் கூறியதோடு, அனைத்து மதங்களும் கிறிஸ்தவம் உட்பட மது அருந்துவதைத் தடைசெய்கின்றன என்று வாதிட்டார்.

பைபிள் மாற்றி அமைக்கப்படுவதற்கு முன்பு இயேசு மது அருந்துவதை தடைசெய்தார் என்று அவர் கூறியிருந்தார்.

“பைபிள் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் கிறிஸ்தவர்கள் சம்பந்தப்பட்டவை மட்டுமல்ல என்பதை நான் கூற விரும்புகிறேன். இயேசுவுக்கு வெளிப்படுத்தப்பட்ட பைபிளை முஸ்லிம்களான நாங்கள் நம்புகிறோம். இது நாங்கள் பாதுகாக்கும் ஒரு நம்பிக்கை. நான் கையாண்டேன் அல்லது மாற்றினேன் என்று சொன்னபோது, ​​புத்தகத்தின் அசல் தன்மையைப் பாதுகாப்பதே எனது நோக்கம், ” என்று அவர் அப்போது கூறியிருந்தார்.