Home One Line P2 அமெரிக்கா : 253 – 213 எண்ணிக்கையில் நிலைகுத்தி நிற்கும் வாக்கு எண்ணிக்கை

அமெரிக்கா : 253 – 213 எண்ணிக்கையில் நிலைகுத்தி நிற்கும் வாக்கு எண்ணிக்கை

971
0
SHARE
Ad

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தலுக்காக வாக்குகள் தொடர்ந்து இரவு பகலாக எண்ணப்பட்டு வந்தாலும், கடந்த மூன்று நாட்களாக 253 – 213 என்ற எண்ணிக்கையிலேயே இறுதி முடிவுகள் நிலைகுத்தி நிற்கின்றன.

இன்று வெள்ளிக்கிழமை (நவம்பர் 7) மலேசிய நேரம் காலை 8.30 மணி நிலவரப்படி தொடர்ந்து ஜோ பைடன் 253 வாக்குகளுடன் முன்னணி வகிக்கிறார். வெற்றி வாகை சூட அவருக்குத் தேவை 270 வாக்குகள். அதன்படி இன்னும் 17 வாக்குகள் கிடைத்தால் போதும் அடுத்த அமெரிக்க அதிபராகி விடுவார்.

வாக்கு எண்ணிக்கை அடிப்படையிலான கணிப்புகளின்படி பைடன் 270 அல்லது 272 வாக்குகள் பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. எனினும், அரிசோனா, மிச்சிகன், ஜோர்ஜியா, பென்னிசில்வானியா போன்ற சில மாநிலங்களில் இன்னும் வாக்கு எண்ணிக்கை இறுதிக் கட்டத்தில் இருக்கின்றன.

#TamilSchoolmychoice

மிகக் குறுகிய வித்தியாசத்திலேயே இரு வேட்பாளர்களும் வாக்குகளைப் பெற்று வருவதால், இறுதி நேரத்தில் அதிரடி மாற்றங்கள் நிகழ வாய்ப்புள்ளதாக அரசியல் ஆய்வாளர்கள் கணிக்கின்றனர்.

மொத்தமுள்ள 538 தேர்தல் வாக்கு தொகுப்புகளில் டிரம்ப் 213 வாக்குகளுடன் பின்தங்கியிருக்கிறார்.

தேர்தல் நடைமுறைகள், வாக்குகள் எண்ணப்படுவது குறித்துக் கடுமையாகச் சாடிய டொனால்ட் டிரம்ப் “தேர்தல் முடிவுகள் குறித்து நாங்கள் அமெரிக்க உச்சநீதிமன்றத்திற்குச் செல்வோம். அனைத்து வாக்கு எண்ணிக்கையும் நிறுத்தப்பட வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்” என்று ஏற்கனவே தெரிவித்திருந்தார்.

எனினும் அத்தகைய சட்ட முயற்சி எதனையும் அவர் இதுவரையில் தொடங்கவில்லை.