SHARE
Ad

கோலாலம்பூர்: 222 நாடாளுமற உறுப்பினர்களில் 80 பேரை மட்டுமே ஒரே நேரத்தில் மக்களவையில் அமர மட்டுப்படுத்தும் அரசாங்கத்தின் முடிவை தேசிய முன்னணி பொதுச்செயலாளர் அனுவார் மூசா ஆதரித்தார்.

மற்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் வேறு அறைகளில் அமர்ந்து கலந்து கொள்ளலாம் என்று அனுவார் விளக்கினார்.

“எந்த ஜனநாயகம் பாதிக்கப்படுகிறது? கூட்டமாக இல்லாதபடி ஏற்படுத்தப்பட்ட திருப்பங்களை எடுத்துக் கொள்ளுங்கள்.

#TamilSchoolmychoice

“பேச விரும்புகிறீர்கள், வாக்களிக்க விரும்புகிறீர்கள் என்றால் நுழையலாம். வெளியே சிசிடிவி வழியாக அமர்வை பின்பற்றலாம்.

“அவர்களுக்கு புரியவில்லை. மக்களவையில் 80 நாடாளுமன்ற உறுப்பினர்கள் என்பது அறையில் இருப்பதன் பொருள்.

“மற்றவர்கள் அறைக்குச் செல்லலாம். ஆனால், நாடாளுமன்ற அமர்வில் கலந்து கொள்ளலாம். அறைக்குள் நுழைய, விவாதிக்க விரும்பினால், வாக்களிக்க விரும்பினால், நுழைய முடியும், ” என்று அவர் மீண்டும் கூறினார்.

கொவிட் -19 தொற்றுநோய் பரவாமல் தடுக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. 2021 வரவு செலவு தாக்கல் செய்யப்படும் நாளான இன்று முதல் இது நடைமுறையில் இருக்கும்.

80 நாடாளுமன்ற உறுப்பினர்களில் அரசாங்கத்தைச் சேர்ந்த 41 பேரும், எதிர்க்கட்சி, சுயேச்சை நாடாளுமன்ற உறுப்பினர்கள் 39 பேரும் அடங்குவர்.