Home உலகம் டிரம்பின் வழக்குகளை அமெரிக்க நீதிமன்றம் தள்ளுபடி செய்தது

டிரம்பின் வழக்குகளை அமெரிக்க நீதிமன்றம் தள்ளுபடி செய்தது

594
0
SHARE
Ad

வாஷிங்டன்: அமெரிக்க தேர்தலில் முறைகேடு ஏற்பட்டுள்ளதாகக் கூறி மிச்சிகன் மற்றும் ஜார்ஜியாவில் டிரம்ப் பிரச்சாரக் குழு வழக்குகள் தொடுத்திருந்தன.

அந்த வழக்குகளை அமெரிக்க நீதிமன்றங்கள் தள்ளுபடி செய்துள்ளன.

இல்லாத வாக்குகளை எண்ணுவதாகவும், முறையற்ற வாக்குகள் எண்ணப்படுவதாக டிர்மப் தரப்பு குற்றம் சாட்டியது.

#TamilSchoolmychoice

மிச்சிகனில், உரிமைகோரல் நீதிமன்ற நீதிபதி சிந்தியா ஸ்டீபன்ஸ், இந்த வழக்கை நிராகரித்தார். ஜார்ஜியாவில், நீதிபதி ஜேம்ஸ் எப் பாஸ் இந்த வழக்கை தள்ளுபடி செய்தார். “நான் கோரிக்கையை மறுத்து மனுவை தள்ளுபடி செய்கிறேன்,” என்று அவர் கூறினார்.

பென்சில்வேனியா, நெவாடாவிலும் டிரம்ப் தரப்பு வழக்குகளைத் தாக்கல் செய்துள்ளது.