Home One Line P1 ‘நேருக்கு நேர் பிரச்சாரங்களுக்கு தற்காலிக தடை விதிக்கவும்!’

‘நேருக்கு நேர் பிரச்சாரங்களுக்கு தற்காலிக தடை விதிக்கவும்!’

488
0
SHARE
Ad
படம்: முன்னாள் துணைத் தலைவர் வான் அகமட் வான் உமர்

கோலாலம்பூர்: கொவிட் -19 பரவுவதைத் தடுக்க பத்து சாபி நாடாளுமன்ற இடைத்தேர்தலில் நேருக்கு நேர் பிரச்சாரங்களை “தடை” செய்ய தேர்தல் ஆணையம் முன்மொழிந்துள்ளது.

தேர்தல் ஆணையத்தின் முன்னாள் துணைத் தலைவர் வான் அகமட் வான் உமர் கூறுகையில், பிரச்சார காலத்தைக் குறைக்கவும் தேர்தல் ஆணையத்தைக் கேட்டுக் கொண்டார்.

“பத்து சாபி நாடாளுமன்ற இடைத்தேர்தலை நடத்த தேர்தல் ஆணையம் விரும்புவது மிகவும் சிக்கலானது. பத்து சாபி வாக்காளர்கள் நிர்ணையிக்கப்பட்ட நிர்வாக நடைமுறைகளுக்கு இணங்குவதை உறுதிப்படுத்துவது கடினம்.

#TamilSchoolmychoice

” பிரச்சாரத்தை தடை செய்ய முடியும். பிரச்சார காலத்தில் பிரச்சாரம் செய்ய அனுமதிக்க முடியாது. பிரச்சார காலம் குறைக்கப்பட்டால், எந்த பிரச்சனையும் இல்லை.

“நாம் பிரச்சாரத்திற்கு வேறு வழிகளைப் பயன்படுத்தலாம். பிரச்சார முறைகளை நாம் விவரிக்க வேண்டும். நம் நாடு இப்போது மிகவும் மேம்பட்ட தகவல் தொடர்பு தொழில்நுட்பத்தைக் கொண்டுள்ளது, எனவே சமூக ஊடகங்கள் மூலம் பிரச்சாரத்தை தீவிரப்படுத்தலாம்” என்று அவர் தெரிவித்தார்.

பத்து சாபி நாடாளுமன்ற இடைத்தேர்தலை டிசம்பர் 5- ஆம் தேதி தேர்தல் ஆணையம் நிர்ணயித்தது.

வேட்புமனுத் தாக்கல் நவம்பர் 23- ஆம் தேதி நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அக்டோபர் 2-ஆம் தேதி லியூ வுய் கியோங் மரணமுற்றதைத் தொடர்ந்து பத்து சாபி இடைத்தேர்தல் நடைபெறுகிறது.