வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தல் வாக்குகள் எண்ணிக்கை தொடங்கப்பட்ட மூன்று நாட்களுக்குப் பிறகு, (அமெரிக்க நேரப்படி) நவம்பர் 6 (வெள்ளிக்கிழமை காலை) டெசிஷன் டெஸ்ட்க் (Decision Desk) தலைமையகம் முன்னாள் துணை அதிபர் ஜோ பைடென் வெற்றிப் பெற்றதாக அறிவித்துள்ளது.
ஆயினும் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் இன்னும் வெளியிடவில்லை. நாடு முழுவதும் உள்ள மாநிலங்கள் தொடர்ந்து வாக்குகளை எண்ணிக்கொண்டிருந்தாலும், பிற முக்கிய செய்தித் தளங்களும் விரைவில் இதனை வெளியிடும் என்று பரவலாக எதிர்பார்க்கப்படுகிறது.
டெசிஷன் டெஸ்க் புதிய செய்தி நிறுவனமாகும், ஆனால் அது அசோசியேட்டட் பிரஸ் போன்ற செய்தி நிறுவனங்களிலும், என்.பி.சி நியூஸ் மற்றும் சி.என்.என் போன்ற ஒளிபரப்பு சேவைகளிலும் சேர்ந்தது.
கடந்த மூன்று நாட்களாக தொடர்ந்து ஜொ பைடன் முன்னணியில் இருந்து வரும் நிலையில், அதிபர் டொனால்டு டிரம்ப் தேர்தலில் முறைகேடு நடந்துள்ளதாக வழக்குகள் தொடுக்கும் முயற்சியில் இறங்கியுள்ளார்.
இதற்கிடையே, தேர்தலில் முறைகேடு ஏற்பட்டுள்ளதாகக் கூறி மிச்சிகன் மற்றும் ஜார்ஜியாவில் டிரம்ப் பிரச்சாரக் குழு வழக்குகள் தொடுத்திருந்தன. அந்த வழக்குகளை அமெரிக்க நீதிமன்றங்கள் தள்ளுபடி செய்தது குறிப்பிடத்தக்கது.
வாக்குகளை எண்ணுவதாகவும், முறையற்ற வாக்குகள் எண்ணப்படுவதாக டிரம்ப் தரப்பு குற்றம் சாட்டியது.
மிச்சிகனில், உரிமைகோரல் நீதிமன்ற நீதிபதி சிந்தியா ஸ்டீபன்ஸ், இந்த வழக்கை நிராகரித்தார். ஜார்ஜியாவில், நீதிபதி ஜேம்ஸ் எப் பாஸ் இந்த வழக்கை தள்ளுபடி செய்தார். “நான் கோரிக்கையை மறுத்து மனுவை தள்ளுபடி செய்கிறேன்,” என்று அவர் கூறினார்.
பென்சில்வேனியா, நெவாடாவிலும் டிரம்ப் தரப்பு வழக்குகளைத் தாக்கல் செய்துள்ளது. இதற்காக நிதி திரட்டும் பணியும் வேகமாக நடந்து வருவதாகக் கூறப்படுகிறது.