Home One Line P1 2021 வரவு செலவு திட்டம் பலவீனமானது- அன்வார்

2021 வரவு செலவு திட்டம் பலவீனமானது- அன்வார்

605
0
SHARE
Ad

கோலாலம்பூர்: நேற்று வெள்ளிக்கிழமை (நவம்பர் 6) தாக்கல் செய்யப்பட்ட 2021 வரவு செலவு திட்டத்தில் மிக முக்கியமான பலவீனம் என்னவென்றால், பொருளாதார வளர்ச்சியை எவ்வாறு இயக்குவது என்பது குறித்த ஒரு கருத்தை அது தரவில்லை என்று எதிர்க்கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிம் தெரிவித்துள்ளார்.

உடனடி எதிர்வினையில் அன்வார் இதனைத் தெரிவித்தார்.

“மிகவும் வெளிப்படையான பலவீனம் என்னவென்றால், பொருளாதாரத்தை நாம் எவ்வாறு புதுப்பிக்க முடியும் என்ற நோக்கம் இல்லை, அது எனக்கு ஒரு பெரிய பலவீனம்.

#TamilSchoolmychoice

“இந்த வரவு செலவு திட்டம், பொருளாதார வளர்ச்சியை தூண்டுவதற்கும், நடைமுறை படுத்துவதற்கும், புதியதாக இருப்பதற்கும் ஒரு யோசனையை அளிக்கவில்லை,” என்று அவர் தமது முகநூலில் குறிப்பிட்டார்.

சில திட்டங்களை விவாதிக்க வேண்டிய அவசியம் இருப்பதாக அன்வார் கூறினார்.

மத்திய அரசின் நிதி கணக்கெடுப்பு மற்றும் வருவாய் மதிப்பீடுகள் அடிப்படையில், 2021 ஆம் ஆண்டுக்கான பெருநிறுவன வரி கணிப்பு 59.4 பில்லியனாக இருப்பதை அவர் சுட்டிக் காட்டினார். 2019- ஆம் ஆண்டு அது 63.7 பில்லியனாக இருந்ததை அவர் ஒப்பிட்டார்.

“அதை ஏற்றுக்கொள்வது கடினம், ஏனென்றால் பல வணிகங்கள் கிட்டத்தட்ட திவாலாகிவிட்டன.

“கணிப்புகளைக் கணக்கிடுவதில், இது கவலை அளிக்கிறது. இன்னும் வெளிப்படையான அணுகுமுறை இருக்க வேண்டும். இது நமது கொள்கைகளை பாதிக்கும் என்பதால் உண்மைகளை கூற வேண்டும்,” என்று அவர் கூறினார்.

தேவைப்படுபவர்களுக்கு பண உதவி வழங்குவது நல்லது, ஆனால், பொருளாதார மீட்சிக்கான பதில் இது அல்ல.

“ஆனால், தேவை என்னவென்றால் ஒரு ஒழுங்கான பொருளாதாரத்தை புதுப்பிக்க வேண்டும்,” என்று அவர் கூறினார்.

அனைத்து கடன் வாங்குபவர்களுக்கும் ஒரு விரிவான திருப்பிச் செலுத்தும் தள்ளுபடி இல்லாதது மற்றும் அனைத்து பங்களிப்பாளர்களுக்கும் ஈபிஎப் பணத்தை திரும்பப் பெற விரிவான அனுமதி இல்லாததையும் அன்வார் தொட்டுப் பேசினார்.

” நிதி அமைச்சர் வங்கியின் நலனுக்காகவே அதிகம் பேசியிருந்தார். கடன் வாங்குபவரின் மற்றும் பொருளாதாரத்தின் நலனில் அல்ல,” என்று அவர் தெரிவித்தார்.

நேற்று அறிவிக்கப்பட்ட வரவு செலவு திட்டத்தை நிதியமைச்சர் தெங்கு ஜாப்ருல் அசிஸ் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார்.

இந்த ஆண்டு மார்ச் மாதம் புத்ராஜெயாவைக் கைப்பற்றிய பின்னர் தேசிய கூட்டணி அரசாங்கத்தின் முதல் வரவு செலவு திட்டமாக இது அமைகிறது.

2021- ஆம் ஆண்டில் மொத்தம் 322.5 பில்லியன் ரிங்கிட் ஒதுக்கப்பட்டுள்ளது. இது 2020 வரவு செலவு திட்டத்தை விட 7.8 பில்லியன் ரிங்கிட் அதிகமாகும்.

செயல்பாட்டு செலவினங்களுக்காக சுமார் 236.5 பில்லியன் ரிங்கிட் ஒதுக்கப்பட்டுள்ளது. வளர்ச்சித் திட்டங்களுக்காக 69 பில்லியன் ரிங்கிட் ஒதுக்கப்பட்டுள்ளது. கொவிட் -19 நிதிக்கு 17 பில்லியன் ரிங்கிட் ஒதுக்கப்பட்டுள்ளது.