கோலாலம்பூர் : ஆஸ்ட்ரோவில் ஒளியேறிவரும் “யார் இவன்?” தொடர் பலரையும் கவர்ந்துள்ளது. அதன் இயக்குநர் பிரகாஷ் ராஜாராம், முக்கியக் கதாபாத்திரங்களில் தோன்றிய சூர்ய பிரகாஷ், மூன் நிலா, இர்பான் சய்னி, கிருத்திகா ஆகியோருடன் நடத்தப்பட்ட சந்திப்பின்போது அவர்கள் பகிர்ந்து கொண்ட சில சுவாரசியமான விவரங்களை ஆஸ்ட்ரோ இரசிகர்களுக்கு வழங்குகிறோம்.
இயக்குநர் பிரகாஷ் ராஜாராம்

• இத்தொடர் எதைப் பற்றியது? அதன் பின்னணியில் உள்ள உத்வேகத்தையும் பகிர்ந்து கொள்ளுங்கள்?
நான் ஸ்கிரிப்டுக்கு அறிமுகப்படுத்தப்பட்டேன். ஆடை அலங்கார (ஃபேஷன்) துறை அடிப்படையிலான கதையை இயக்குவது எனது முதல் முறையாக இருந்ததால் எந்த தயக்கமும் இல்லாமல் அதை ஏற்றுக்கொண்டேன். பல வகைகளை (genres) கொண்ட ஸ்கிரிப்டை வாசிப்பது மிகவும் சுவாரஸ்யமானது. இந்த தொடரை இயக்க மேலும் என்னை ஊக்கமளித்தது.
• ஒரு அனுபவமிக்க இயக்குநராக, இந்நிகழ்ச்சியை இயக்கிய உங்களின் அனுபவத்தை பகிருங்கள் ?
ஆடை அலங்கார (ஃபேஷன்) துறை அடிப்படையிலான நாடகத் தொடரை இயக்குவது ஒரு புதிய அனுபவமாகும். ஊக்கமளிக்கும் இளம் நடிகர்களுடன் பணியாற்றியது சிறப்பான, மறக்கமுடியாத அனுபவம். கதை, தரம் மற்றும் பலவற்றில் மற்ற நாடகங்களை விட இத்தொடர் வேறுபட்டது. தனது மரணத்தின் பின்னணியில் உள்ள உண்மையைக் கண்டறிய இரண்டாவது வாய்ப்பு வழங்கப்பட்ட இறந்த நபரைப் பற்றி இத்தொடர் சித்தரிக்கின்றது.

• இத்தொடருக்கான உங்களின் நம்பிக்கைகள் யாவை?
இந்தத் தொடரைப் பார்த்து இரசிகர்கள் மகிழ்வார்கள் என்று நம்புகிறேன். இந்த பொன்னான வாய்ப்பை எங்களுக்கு வழங்கிய ஆஸ்ட்ரோவுக்கு நன்றி.
நடிகர்கள்: சூர்ய பிரகாஷ், மூன் நிலா, இர்பான் சய்னி & கிருத்திகா
• யார் அவன் தொடரில் நீங்கள் வகித்த கதாபாத்திரங்களைப் பற்றிக் கூறுங்கள்?

o சூர்யா: யார் அவன் தொடரில் ‘அமர்’ மற்றும் ‘நந்தா’ எனும் இரண்டு கதாப்பாத்திரங்களில் நான் வலம் வந்தேன். ‘அமர்’ ஒரு திறமையான மற்றும் தனித்துவமான ஆடை வடிவமைப்பாளர். மறுபுறம், ‘நந்தா’ ஒரு அப்பாவியான தன்னம்பிக்கை சிறு அளவுக் கொண்ட நபர். எனவே, இரு வேடங்களிலும் உள்ள வேறுபாடுகளை வெளிப்படுத்த எனக்கு மிகவும் சவாலாக இருந்தது. இருப்பினும், இவ்வற்புதமான வாய்ப்பை வழங்கிய ரீச் தயாரிப்பு (Reach Production) நிறுவனம் மற்றும் ஆஸ்ட்ரோவுக்கு எனது மனமார்ந்த நன்றி.
o மூன் நிலா: தைரியமான, அழகான மற்றும் புத்திசாலித்தனமான மாடலான ‘மாயா’ எனும் கதாபாத்திரத்தில் யார் அவன் தொடரில் நடித்தேன். தனது வாழ்க்கையில் நிறையக் கனவுகள் இருப்பினும் மாயா தனது கண்ணியத்தை சமரசம் செய்யாதவள். அநாகரிகத்தை சற்றும் பொறுத்துக்கொள்ளமாட்டாள். இறுதியில் அமரின்பால் காதல் வயப்படுகிறாள். அழுத்தத்தின் போதும் உண்மையை வெளிப்படுத்த அமருக்கு உதவுகிறாள்.
o இர்பான்: எனது கதாபாத்திரத்தின் பெயர் ‘சஞ்சய்’, ஒரு பிரபலம். அவர் எப்போதும் வெற்றி பெற விரும்புபவர். தனக்கு எதிராக யாரையும் ஏற்றுக்கொள்ள முடியாத குணம் கொண்டவர். அவர்களை அழிக்க அவர் எந்த எல்லைக்கும் செல்வார்.
o கிருத்திகா: தைரியமான நட்பு குணம் கொண்ட சிறந்த மாடலான ‘தனுஜா’ எனும் கதாபாத்திரத்தில் நடித்தேன். அவள் ஒரு தனித்துவமான முடி நிறம் மற்றும் பேஷன் உணர்வை கொண்டவர். அமர் அவளது நெருங்கிய நண்பர்.
• இந்நிகழ்ச்சியில் பணியாற்றிய உங்களின் மறக்கமுடியாத தருணங்களைப் பகிர்ந்துக் கொள்ள முடியுமா?
o சூர்யா: எனது மறக்கமுடியாத தருணம் யாதெனில், குழுவினர் என்னை அடையாளம் காண முடியாத அளவிற்கு ‘நந்தா’ கதாபாத்திரத்திற்காக மிகவும் இருண்ட ஒப்பனை அணியச் செய்தது. குறிப்பிடத்தக்க வேலைக்காக ‘ஷனா’ ஒப்பனை கலைஞருக்கு இவ்வேளையில் நன்றி கூற கடமைப்பட்டுள்ளேன். எனக்கு மாடலிங் அனுபவம் இல்லாததால், அதனைக் கற்றுக் கொள்ள சில வாரங்களுக்கு சில பயிற்சிகளுக்குச் செல்ல வேண்டியிருந்தது. ஆடை அலங்கார வடிவமைப்பாளர் எவ்வாறு சிந்திக்கின்றனர் மற்றும் செயல்படுகின்றனர் என்பதைப் புரிந்துகொள்ள ஒரு சிலரை நான் சந்தித்தேன்.

o மூன் நிலா: மூத்த இயக்குனர் திரு. பிரகாஷ் மற்றும் முழு அணியுடன் பணிபுரிந்தது எனக்கு ஒரு சிறந்த அனுபவமாக இருந்தது. தொடர்ச்சியான படப்பிடிப்புக்கள் என் ஆரோக்கியத்தை சற்று பாதித்தாலும் என்னை எப்போதும் உற்சாகப்படுத்த சில நல்லுள்ளங்கள் என்னைச் சுற்றி இருந்தனர்.
எல்லோரும் என் பெயரை மறந்து என்னை ‘மாயா’ என்று அழைக்கத் தொடங்கிய தருணத்தை என்னால் மறக்க முடியாது. இந்த படப்பிடிப்பிலிருந்து ஒவ்வொரு கணத்தையும் நான் மிகவும் மதிக்கிறேன். நான் இதற்கு முன்பு மாடலிங் துறையில் பணியாற்றவில்லை. எனவே, அது எனக்கு ஒரு பெரிய சவாலாக இருந்தது. ஆடை அலங்கார அடிப்படையிலான திரைப்படங்களைப் பார்ப்பது மற்றும் ஏஆர்பி மாடலிங் ஏஜென்சியிடமிருந்து (ARP Modeling agency) நடை பயிலும் முறை, அணுகுமுறை மற்றும் பிற விஷயங்களைக் கற்றுக்கொள்வதற்கான பயிற்சிகளில் பங்கேற்பது உட்பட நிறைய ‘வீட்டுப்பாடம்’ செய்தேன். ஆரம்பத்தில் இது கடினமாக இருந்தாலும், நாளடைவில் நான் உடல் செய்கைகளைக் கற்றுக் கொண்டேன்.

o இர்பான்: எனக்கு மறக்கமுடியாத தருணங்கள் பல உள்ளன. அவற்றுள் ஒன்று, நான் ஒரு சக நடிகருடன் கடினமாக நடந்துக் கொள்ள வேண்டியக் காட்சி. நான் இதற்கு முன்பு இம்மாதிரியான பாத்திரத்தில் நடித்ததில்லை. எனவே, சற்று கடினமாக நடந்துக் கொண்டேன். எதிர்காலத்தில் இம்மாதிரியான நடிப்பு வடிவத்தை சிறப்பாக வெளிப்படுத்தும் நுணுக்கத்தை இது எனக்கு கற்றுக் கொடுத்தது.
கூடுதலாக, நான் முன்பு மாடலிங் செய்திருக்கிறேன், ஆனால் அது நிபுணத்துவமற்ற மாடலிங். ஒரே நேரத்தில் மாடலிங் மற்றும் நடிப்பு சம்பந்தப்பட்டதால், யார் அவன் தொடரில் எனக்கு ஏற்பட்ட அனுபவம் முற்றிலும் மாறுபட்டது. இது சில நேரங்களில் சவாலாகவும் இருந்தது.

o கிருத்திகா: தனித்துவமான ஆடை அலங்காரத்துடன், நான் செய்வதற்கு 3 அலங்கார நடைகள் (கேட்வாக்குகள்) வழங்கப்பட்டிருந்தன. ஒவ்வொன்றும் அதன் தனித்துவமானக் கதையைக் கொண்டிருந்தன. நான் உள்ளூர் ஆடை வடிவமைப்பாளரான தேசிகிலத்தைச் (Desiglam) சேர்ந்த சண்முகசெல்வியுடன் பணிபுரிந்தேன். இந்த கேட்வாக்குகளுக்காக பலவிதமான நாகரீகமான ஆடைகளை அணிந்தது நல்ல அனுபவமாக இருந்ததோடு, இது வெவ்வேறு ஆளுமைகளை வெளிப்படுத்துவதற்கும் என்னை வித்திட்டது. நான் முன்பு ஒரு அழகு ராணிப் போட்டியின் வெற்றியாளராக இருந்ததால், அடிப்படை கேட்வாக்கை சரியாகப் செய்ய இது எனக்கு உதவியது. இருப்பினும், அழகு ராணிப் போட்டி மற்றும் மாடலிங் இரண்டும் வெவ்வேறு விஷயங்கள். எனவே, நடிப்புத் திறனுடன் தேவையான விஷயங்களைக் கடைப்பிடிப்பது சவாலானது. ஆயினும்கூட, நான் சவாலை ஏற்றுக்கொண்டேன், நான் என் சிறந்ததைக் வழங்கினேன்.
• இத்தொடருக்கான உங்களின் சில நம்பிக்கைகள் யாவை?
o சூர்யா: இந்தத் தொடர் அதன் தனித்துவமான, ஈடுபாடுடைய திரைக்கதையை (ஸ்கிரிப்ட்) கொண்டு பலரைச் சென்றடையும். அவர்கள் மனதைத் தொடும் என்று நம்புகிறேன்.
o மூன் நிலா: என் நடிப்பு இரசிகர்களை நேர்மறையாகப் பாதிக்கும் என்பதை நான் நம்புகையில் இரசிகர்கள் எனது பாத்திரத்தை விரும்புவார்கள் என்று நம்புகிறேன். மாடலிங் துறையில் ஒரு பகுதியாக இருக்க விரும்புவோருக்கு இத்தொடர் ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக இருக்கும் என்று நம்புகிறேன். பெண்கள் தங்கள் கனவுகளை அடைய முயற்சித்தாலும் அவர்களின் சுய கண்ணியத்தை நிலைநிறுத்துவார்கள் என்று நம்புகிறேன். இந்தத் தொடருக்கு இன்னும் பல பருவங்கள் (சீசன்கள்) வரும் என்று நம்புகிறேன்.
o இர்பான்: சிலர் தங்களைத் திருத்திக் கொள்ள இத்துறையிலுள்ள பிரச்சினைகளை இத்தொடர் வெளிச்சத்திற்கு கொண்டு வரும் என்று நம்புகிறேன். ஆடை அலங்கார துறைக்கு வெளியே உள்ளவர்கள் இதை முற்றிலும் எதிர்மறையாக தீர்மானிக்க மாட்டார்கள் என்று நம்புகிறேன்.
o கிருத்திகா: உள்ளூர் ஆடை அலங்காரத் துறை என்பது ஒப்பீட்டளவில் ஒரு புதிய தலைப்பாகும். மேலும், இது இரசிகர்களை அதன் ஒரு சில பகுதிகளுக்கு அறிமுகப்படுத்தியது என்று நம்புகிறேன். தொடர்ச்சியான ஆதரவுக்கு அனைத்து இரசிகர்களுக்கும் நன்றி. இத்தொடரைப் பார்க்காதவர்கள், ஆஸ்ட்ரோ கோ மற்றும் எப்போது வேண்டுமானாலும் ஆன் டிமாண்டில் பதிவிறக்கம் (ஸ்ட்ரீம்) செய்து பார்த்து மகிழலாம். முடிவில் ஒரு சுவாரசியமான திருப்பம் இருப்பதால் யார் அவன் தொடரைக் காண மறக்காதீர்கள்!