Home One Line P1 வரவு செலவுத் திட்டத்தின் முக்கிய வணிக அம்சங்கள்

வரவு செலவுத் திட்டத்தின் முக்கிய வணிக அம்சங்கள்

1031
0
SHARE
Ad

கோலாலம்பூர் : இன்று வெள்ளிக்கிழமை நிதியமைச்சர் தெங்கு ஜாப்ருல் அசிஸ் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்த 2021 வரவு செலவுத் திட்டத்தில் காணப்படும் சில முக்கிய வணிக அம்சங்கள் பின்வருமாறு:

  • மற்ற சமூகங்களின் வணிகர்களுக்காக 5 மில்லியன் ரிங்கிட் கடனுதவி தெக்குன் மூலமாக ஒதுக்கப்பட்டுள்ளது.
  • சிங்கப்பூருக்கும் கோலாலம்பூருக்கும் இடையிலான துரித இரயில் திட்டத்தை அரசாங்கம் தொடர்ந்து  மேற்கொள்ளும். இதன் மூலம் இருநாடுகளுக்கும் இடையிலான போக்குவரத்து மேம்பாடு காணும். வணிக வாய்ப்புகளும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
  • மேலும் போக்குவரத்துத் துறையில் 3.8 பில்லியன் ரிங்கிட் மதிப்புடைய கட்டமைப்புத் திட்டங்களும் தொடரப்படும்.
  • குவாசா டாமன்சாரா (Kwasa Damansara) திட்டம் 50 பில்லியன் ரிங்கிட் மதிப்பில் தொடரப்படும். வாணிப மையங்களையும், குடியிருப்பு வீடமைப்புகளையும், சமூக நல வசதிகளையும் இந்தத் திட்டம் உள்ளடக்கியிருக்கும். புத்தாக்க மையம், சுகாதார மையம் ஆகியவற்றையும் இந்தத் திட்டம் உள்ளடக்கியிருக்கும்.
  • கையுறைகளையும், மருத்துவ பாதுகாப்பு உபகரணங்களையும் உற்பத்தி செய்யும் 4 பெரிய நிறுவனங்கள் கூட்டாக 400 மில்லியன் ரிங்கிட்டை கொவிட்-19 எதிர்ப்புப் போராட்டத்திற்காக வழங்கவிருக்கின்றன. இந்தத் தொகை கொவிட்-19 தடுப்பூசிக்கு ஆகக் கூடிய செலவினங்களைக் குறைக்கப் பயன்படுத்தப்படும்.
  • கிராமப்புற கட்டமைப்பு மேம்பாட்டுக்காக 2.7 பில்லியன் ரிங்கிட் ஒதுக்கப்படுகிறது. இதன் மூலம் அரசாங்கக் குத்தகையாளர்களுக்கு கூடுதல் குத்தகை வாய்ப்புகள் வழங்கப்படும்.
  • முதன் முறையாக வீடு வாங்குபவர்களுக்கு முத்திரை வரி (ஸ்டாம்ப் டூட்டி) விலக்கு அளிக்கப்படுகிறது.
  • சொந்த வீடுகளை வாங்குபவர்களை ஊக்குவிக்க 500,000 ரிங்கிட் வரையிலான வீடுகளுக்கான முத்திரை வரி இனி விதிக்கப்படாது. 1 ஜனவரி 2021 தொடங்கி 31 டிசம்பர் 2025 வரையிலான அனைத்து வீடுகள் விற்பனை ஒப்பந்தங்களுக்கும் இந்த முத்திரை வரிவிலக்கு வழங்கப்படும்.
  • 2021-2022 ஆண்டுகளுக்கு அகண்ட அலைவரிசை பயன்பாட்டை விரிவாக்க 7.4 பில்லியன் ரிங்கிட் ஒதுக்கப்படுகிறது.

வருமான வரி சலுகைகள்

  • பெற்றோர்களுக்கான மருத்துவ, சிறப்புத் தேவைகளுக்கும், அவர்களைப் பராமரிப்பதற்கும் வழங்கப்பட்டு வந்த வருமான வரி நிவாரணம் தற்போது 8 ஆயிரம் ரிங்கிட்டாக உயர்த்தப்படுகிறது.
  • தனிநபர், கணவன் அல்லது மனைவி, குழந்தைகளுக்கு கடுமையான நோய்கள் பீடிக்கப்பட்டிருந்தால் அதற்காக வழங்கப்படும் வருமான வரி விலக்கு அதிகபட்சமாக 8 ரிங்கிட்டாக உயர்த்தப்படுகிறது.

உற்பத்தித் தொழில்களுக்கு சலுகைகள்

  • உற்பத்தித் தொழிற்சாலைகளை மலேசியாவுக்குள் கொண்டுவரும் நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டு வந்த சலுகைகள் தொடரும். இந்த சலுகைகள் எதிர்வரும் டிசம்பர் 2022 ஆண்டு வரை தொடரும். இந்த சலுகைகளின்படி நிறுவனங்களுக்கு முதல் 10 ஆண்டுகளுக்கு வரிவிலக்கு அளிக்கப்படும் அல்லது குறைந்த பட்சமாக 10 ஆண்டுகளுக்கு 10 விழுக்காடு வருமான வரி மட்டுமே விதிக்கப்படும்.