கோலாலம்பூர்: பிற நிர்ணயிக்கப்பட்ட நிர்வாக நடைமுறைகளுக்கு இணங்குவதோடு, கூடுதலாக பெட்ரோல் நிலையங்களில் மைசெஜாதெரா கைபேசி பயன்பாட்டை பயன்படுத்த வேண்டும் என்று சிபிஆர்சி ஒருங்கிணைப்பாளர் ஜாமால் அப்துல் நசீர் தெரிவித்துள்ளார்.
எண்ணெய் நிலைய கடைகளில் நுழையாவிட்டாலும், கடன் பற்று அட்டையைப் பயன்படுத்தி பணம் செலுத்தும் வாடிக்கையாளர்களுக்கும் இந்த விதி கட்டாயமாகும்.
“எண்ணெய் நிலையங்கள் உட்பட எந்தவொரு கடை வளாகத்திற்கும் வரும் அனைத்து வாடிக்கையாளர்களும் மைசெஜாதெரா பயன்பாட்டைப் பயன்படுத்த வேண்டும். உடல் வெப்பநிலை சோதனை மற்றும் முகக்கவசம் அணிவதும் வேண்டும். அவர்கள் வளாகத்திற்குள் நுழையாவிட்டாலும் கூட, கடன் பற்று அட்டையைப் பயன்படுத்தி மட்டுமே பணம் செலுத்துகிறார்கள், கழிப்பறைக்கு, காற்றை நிரப்புதல் மற்றும் எல்லா நடவடிக்கைகளுக்கும் இந்த செயலியை பயன்படுத்த வேண்டும் ” என்று அவர் உறுதிப்படுத்தினார்.