Home One Line P1 இங்கிலாந்து தவிர, ஜனவரி 1 முதல் வெளிநாட்டு மாணவர்கள் நாட்டிற்குள் நுழையலாம்

இங்கிலாந்து தவிர, ஜனவரி 1 முதல் வெளிநாட்டு மாணவர்கள் நாட்டிற்குள் நுழையலாம்

450
0
SHARE
Ad

கோலாலம்பூர்: ஜனவரி 1 கல்வியாண்டில் வெளிநாட்டு பல்கலைக்கழகம் மற்றும் அனைத்துலக பள்ளி மாணவர்களை நாட்டிற்குள் அரசு அனுமதிக்கும்.

இந்த விதி இங்கிலாந்தில் இருந்து பயணிப்பவர்கள் தவிர அனைத்து வெளிநாட்டு மாணவர்களுக்கும் பொருந்தும் என்று தற்காப்பு அமைச்சர் இஸ்மாயில் சப்ரி யாகோப் தெரிவித்தார்.

இங்கிலாந்தில் தற்போது கொவிட்-19 தொற்றின் புதிய திரிபு மிகவும் வேகமாகப் பரவி வரும் நிலையில், அரசு இந்த முடிவினை எடுத்துள்ளது. பல நாடுகள் இங்கிலாந்து உடனான எல்லையை மூடி உள்ள நிலையில், விமான சேவைகளையும் இரத்து செய்துள்ளன.

#TamilSchoolmychoice

இம்முறை கண்டறியப்பட்டுள்ள இந்த பிறழ்வு குழந்தைகளை நேரடியாகத் தாக்கக் கூடியது என்று மருத்துவ வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.