கிறிஸ்துமஸ் முதல் நாள் தேதியிடப்பட்டிருந்த, லிம் மீதான விசாரணை அடுத்தாண்டுக்கு ஒத்திவைக்கப்பட்டது

    433
    0
    SHARE
    Ad

    கோலாலம்பூர்: ஜசெக பொதுச் செயலாளர் லிம் குவான் எங், 2019- ஆம் ஆண்டில் வெளியிட்ட இரண்டு செய்தி அறிக்கைகள் குறித்து வாக்குமூலம் அளிக்க, அடுத்த ஆண்டு பிற்பகுதியில் அழைக்கப்பட்டுள்ளார்.

    முன்னதாக, நேற்று இது தொடர்பாக வாக்குமூலம் அளிக்க நாளை வியாழக்கிழமை, கிறிஸ்துமஸ் முதல் நாள் அன்று அவர் வரவழைக்கப்பட்டிருந்தார்.

    தனது வழக்கறிஞரும், பூச்சோங் நாடாளுமன்ற உறுப்பினருமான கோவிந்த் சிங் தியோவை காவல் துறை தொடர்பு கொண்டு, வாக்குமூலம் அளிக்கும் நாளை அடுத்தாண்டுக்கு ஒத்திவைத்துள்ளதாகக் கூறியதாக ஓர் அறிக்கையில் கூறினார்.

    #TamilSchoolmychoice

    முன்னதாக, டிசம்பர் 24- ஆம் தேதி காலை 10 மணிக்கு பினாங்கில் உள்ள திமூர் லாவுட் மாவட்ட காவல் துறை தலைமையகத்திற்கு காவல் துறையினர் அவரை அழைத்ததாக கூறியிருந்தார்.

    கிறிஸ்துமஸ் முதல் நாள் அன்று, லிம் மீது விசாரணை நடத்த இருந்த தமது அதிகாரியின் கவனக் குறைவினால், காவல் துறைத் தலைவர் அப்துல் ஹாமிட் பாடோர் அவரிடம் மன்னிப்பு கேட்டதாகவும் லிம் கூறினார்.

    “எனக்கும் எனது குடும்பத்திற்கும் அவர் கிறிஸ்துமஸ் வாழ்த்து தெரிவித்ததற்காக அவருக்கு நன்றி கூறுகிறேன்,” என்று அவர் கூறினார்.

    நேற்று, தாம் மீண்டும் அரசியல் துன்புறுத்தலுக்கு ஆளானதாக லிம் தெரிவித்திருந்தார். 2019- இல் வெளியிட்ட இரண்டு செய்திக்குறிப்புகள் தொடர்பாக காவல் துறை அவரை விசாரித்து வருவதாக அவர் குறிப்பிட்டிருந்தார்.

    “நான் வியாழக்கிழமை காவல் துறையினரை சந்திப்பேன். தேசிய கூட்டணி அரசாங்கத்தின் கிறிஸ்துமஸ் பரிசு,” என்று அவர் ஓர் அறிக்கையில் தெரிவித்திருந்தார்.