Home One Line P2 இங்கிலாந்தில் இருந்து இந்தியா திரும்பிய 20 பேருக்கு கொவிட்-19 தொற்று

இங்கிலாந்தில் இருந்து இந்தியா திரும்பிய 20 பேருக்கு கொவிட்-19 தொற்று

608
0
SHARE
Ad

புது டில்லி: இங்கிலாந்தில் இருந்து இந்தியா வந்த 20 பேருக்கு கொவிட்-19 தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சென்னை, டில்லி, கொல்கத்தா என பல்வேறு விமான நிலையங்களுக்கு இங்கிலாந்தில் இருந்து வந்தவர்களில் குறைந்தது 20 பேருக்கு கொவிட்-19 தொற்று உறுதியாகியுள்ளது.

இங்கிலாந்தில் பரவி வரும் கொவிட்-19 தொற்று தற்போது 70 விழுக்காடு வேகமாக பரவும் சாத்தியத்தைக் கொண்டிள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்புதிய தொற்றால் இங்கிலாந்தில் பல்வேறு இடங்களில் கொவிட்-19 பாதிப்பு எண்ணிக்கை அதிவேகத்தில் உயர்ந்து வருகிறது.

#TamilSchoolmychoice

இங்கிலாந்தில் இருந்து தமிழகம் வந்த 24 பயணிகள் அடங்கிய விமானத்தில் ஒருவருக்கு கொவிட்-19 தொற்று உறுதியாகியுள்ளதாக தமிழக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

கடந்த ஏழு நாட்களில் இங்கிலாந்தில் இருந்து இந்தியா வந்த 1,088 பயணிகளை மத்திய அரசு தீவிரமாக கண்காணித்து வருகிறது.