Home One Line P1 தேசிய சுற்றுலா கொள்கை 2020-2030: நாட்டை உலகளவில் தேர்ந்தெடுக்கப்பட்ட சுற்றுலா தளமாக உருமாற்றும்

தேசிய சுற்றுலா கொள்கை 2020-2030: நாட்டை உலகளவில் தேர்ந்தெடுக்கப்பட்ட சுற்றுலா தளமாக உருமாற்றும்

947
0
SHARE
Ad

கோலாலம்பூர்: இன்று புதன்கிழமை அறிமுகம் செய்யப்பட்ட தேசிய சுற்றுலா கொள்கை (டிபிஎன்) 2020-2030 நாட்டின் சுற்றுலாத் துறையின் இருப்பை உறுதிசெய்து, மலேசியாவை உலகளவில் தேர்ந்தெடுக்கப்பட்ட சுற்றுலா தலமாக மாற்றுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது என்று டான்ஸ்ரீ மொகிதின் யாசின் தெரிவித்தார்.

போட்டித்தன்மையை வலுப்படுத்துதல், நிலையான மற்றும் அனைத்தையும் உள்ளடக்கிய சுற்றுலாத் துறை மேம்பாடு மற்றும் எதிர்காலத்தில் பேரழிவு தயார் நிலை உள்ளிட்ட முக்கிய அணுகுமுறைகள் மூலம் இலக்கை அடைய முடியும் என்று அவர் கூறினார்.

“இந்த கொள்கையின் நோக்கங்களை அடைய முடியும் என்பதை உறுதிப்படுத்த மின்னியல் தொழில்நுட்பத்தின் அடிப்படையில் சுற்றுலாத் துறையின் வளர்ச்சி முக்கியமானது. மேலும், தொழில்நுட்ப முன்னேற்றங்கள் தொழில்துறைக்கு இடையேயான இணைப்புகளை வலுப்படுத்துவதோடு, சுற்றுலாத் துறையில் புதிய புதுமையான துணைத் துறைகளுக்கும் வழி வகுக்கும். அவை வணிக மற்றும் வேலை வாய்ப்புகளை உருவாக்கும். இதன் மூலம் தொழில்நுட்பம் சார்ந்த சுற்றுலா முதலீடு ஊக்குவிக்கப்படுகிறது, ”என்று பிரதமர் கூறினார்.

#TamilSchoolmychoice

பொது-தனியார் ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கும், மேலும் உள்ளூர் மற்றும் அனைத்துலக முதலீட்டாளர்களை ஈர்ப்பதற்கும் மலேசியா சுற்றுலா திட்டங்களுக்கான முதலீட்டு மண்டலங்களை அல்லது சிறப்பு சுற்றுலா முதலீட்டு மண்டலங்களை உருவாக்கும் என்று அவர் கூறினார்.

சுற்றுச்சூழல், கலாச்சாரம் மற்றும் பாரம்பரியம் உள்ளிட்ட தேசிய பொக்கிஷங்களின் வளர்ச்சி மற்றும் பாதுகாப்பை சமநிலைப்படுத்தவும் தேசிய கூட்டணி அரசு உறுதிபூண்டுள்ளது என்று அவர் வலியுறுத்தினார்.

“எங்கள் குறிக்கோள் மலேசியாவை உலகின் சுற்றுச்சூழல் சுற்றுலா இலக்கு என அடையாளம் காண்பது. இதன் மூலம் புதிய பொருளாதார வளர்ச்சியை உண்டாக்குவதோடு, வேலை வாய்ப்புகளையும் உருவாக்க முடியும் என்பதையும் நான் நம்புகிறேன், ” என்று அவர் மேலும் கூறினார்.

சுற்றுலாத்துறையை புதுப்பிக்க மலேசியாவுக்கு குறைந்தது நான்கு ஆண்டுகள் தேவை என்று தேசிய பொருளாதார நடவடிக்கை மன்றம் எதிர்பார்க்கிறது. இது ஒப்பீட்டளவில் நீண்ட காலமாகும், மேலும் தொழில்துறையில் ஈடுபட்டுள்ள அனைத்து தரப்பினருக்கும் பெரும் சவால்களை வழங்கும்.

“இந்த ஆரம்ப கட்டத்தில் உள்நாட்டு சுற்றுலா நடவடிக்கைகளை அதிகரிப்பதன் மூலம் நாட்டின் சுற்றுலாத் துறையை மீண்டும் உருவாக்க முடியும் என்று நான் நம்புகிறேன். அதே நேரத்தில் எல்லைகள் இன்னும் மூடப்பட்டுள்ளன. மேலும் நாட்டில் பயணம் செய்வதற்கான மக்களின் நம்பிக்கையை மீட்டெடுக்க முடியும்,” என்று அவர் மேலும் கூறினார்.