Home One Line P2 தடுப்பு மருந்து இருந்தால், கொவிட்-19 அகன்றுவிடும் என அர்த்தமில்லை!

தடுப்பு மருந்து இருந்தால், கொவிட்-19 அகன்றுவிடும் என அர்த்தமில்லை!

535
0
SHARE
Ad

ஜெனீவா: கொவிட்-19 தொற்றுக்கான தடுப்பு மருந்துகள் பெரும்பாலான நாடுகளில் விநியோகிக்கப்பட்டு வரும் நிலையில், இந்த முயற்சியானது தொற்றை அகற்றி விடாது என உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

“கொவிட்-19 கடைசி கொள்ளை நோய் இல்லை என்பதை வரலாறு நமக்கு உணர்த்துகிறது. கொள்ளை நோய்கள் நமது வாழ்வின் ஒரு பகுதி,” என்று
உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் தெட்ரோஸ் அதனோம் இன்று வெளியிட்டுள்ள காணொலி செய்தியில் தெரிவித்தார்.

வலுவான ஆரம்ப சுகாதாரமே உலகளாவிய சுகாதாரத்துக்கான அடித்தளம் என்றும் கொள்ளை நோய்களை எதிர்கொள்ள தயாராக வேண்டுமெனில் அனைத்து அரசுகளும், அனைத்து சமூகங்களும் இணைந்து அணுக வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice

2019- ஆம் ஆண்டின் இறுதியில் கொவிட்-19 தொற்று சீனாவில் தொடங்கி உலக நாடுகளுக்குப் பரவத் தொடர்ந்ததை அடுத்து பலர் நோய்வாய்ப்பட்டனர். பலர் உயிரிழந்துள்ளனர். இதன் அடிப்படையில், கொள்ளை நோய்களை எதிர்கொள்ள உலகம் தயார்நிலையில் இல்லை என தெரியவந்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.