Home One Line P1 கூலாய்: 2 அதிகாரிகள், 50 கைதிகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்

கூலாய்: 2 அதிகாரிகள், 50 கைதிகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்

406
0
SHARE
Ad

கூலாய்: கூலாய் மாவட்ட காவல் துறை தலைமையகத்தில் இரண்டு கைதிகளுக்கு கொவிட் -19 தொற்று ஏற்பட்டதை அடுத்து 50 கைதிகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

இருவரும் கடைசி வாரத்தில் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டதாக ஜோகூர் காவல் துறைத் தலைவர் டத்தோ அயோப் கான் மைடின் பிச்சை புதன்கிழமை (டிசம்பர் 30) ​​தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

“இரண்டு கைதிகளுடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்த இரண்டு காவல் துறையினரின், கொவிட் -19 பரிசோதனை முடிவுகள் நிலுவையில் உள்ளன. ஆயினும், அவர்கள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்த அறிவுறுத்தப்பட்டனர்,” என்று அவர் தொடர்பு கொண்டபோது கூறினார்.

அதைத் தொடர்ந்து, மேலும் 50 கைதிகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர் என்றும் தற்போது அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என்றும் அவர் கூறினார்.

காவல் துறை தலைமையகத்தில் நிலைமை கட்டுக்குள் இருப்பதாகவும் அது வழக்கம் போல் செயல்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.

இதற்கிடையில், இந்நிலைமை காரணமாக, ஐந்து கைதிகள் சுகாதார அமைச்சின் ஆலோசனையின் கீழ் புதன்கிழமை (டிசம்பர் 30) ​​நீதிமன்றத்தில் ஆஜராக முடியவில்லை.

இதன் விளைவாக, இந்த ஐந்து பேரும் காணொலி விசாரணையின் மூலம் இங்குள்ள கீழ்நிலை நீதிமன்றத்தில் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட வேண்டியிருந்தது.

கொவிட் -19 நாட்டைத் தாக்கிய பின்னர், கூலாய் நீதிமன்றத்தில் நடந்த இந்த இயங்கலை வாயிலான விசாரணை, நாட்டில் நடப்பது இதுவே முதல் முறை.