Home One Line P1 ஈபிஎப் பங்களிப்பை முதலாளிகள் 15-ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும்

ஈபிஎப் பங்களிப்பை முதலாளிகள் 15-ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும்

362
0
SHARE
Ad

கோலாலம்பூர்: 2021 ஜனவரி முதல் ஒவ்வொரு மாதமும் 15- ஆம் தேதிக்குள் கட்டாய ஈபிஎப் பங்களிப்பை அனுப்புமாறு முதலாளிகளுக்கு நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது.

புதன்கிழமை வெளியிட்ட அறிக்கையில், இது ஈபிஎப் தீர்மானித்த அசல் பங்களிப்பு கட்டண தேதிக்கு ஏற்ப இது அமைந்துள்ளது என்று கூறியுள்ளது.

முன்னதாக, 2020 ஏப்ரல் முதல் டிசம்பர் வரை ஒவ்வொரு மாதமும் 15 முதல் 30 வரை பங்களிப்பு செலுத்துவதற்கான நீட்டிப்பை ஈபிஎப் வழங்கியது.

#TamilSchoolmychoice

கொவிட் -19 தொற்றுநோய் பாதிப்பை அடுத்து நிச்சயமற்ற தன்மையால் முதலாளிகளின் சுமையை எளிதாக்குவதே இந்த நீட்டிப்பு வழங்கப்பட்டது.

ஊழியர்களின் பங்களிப்புகள் தாமதமின்றி வழங்கப்படுவதை உறுதி செய்வதற்காக பங்களிப்பு செலுத்தும் தேதி அசல் தேதிக்கு மாற்றப்படும் என்று ஈபிஎப் கூறியது.

பங்களிப்பு செலுத்துதல்களை ஈபிஎப் இணையதளத்தில் ஐ-அகாவுன் (முதலாளி) இணைப்பு, இணைய வங்கி வழியாக அல்லது நியமிக்கப்பட்ட வங்கிகளின் முகப்பிடங்களில் செலுத்தலாம்.