கோலாலம்பூர்: மலேசிய மாணவர்கள் அடுத்தாண்டு மார்ச் 1 முதல் கட்டம் கட்டமாக தங்கள் பல்கலைக்கழகங்களுக்கு திரும்ப அனுமதிக்கப்படுவார்கள்.
இது தேசிய பாதுகாப்பு மன்றத்தின் முடிவைத் தொடர்ந்து, உயர்கல்வி அமைச்சகத்தின் முன்மொழிவுக்கு ஒப்புதல் அளித்துள்ளது.
சிவப்பு மண்டலங்களைச் சேர்ந்த மாணவர்கள் 10 நாட்களுக்கு முன்னதாகவே தங்கள் வளாகங்களுக்கு வர வேண்டும். அவர்கள் முதலில் தனிமைப்படுத்தப்படுவார்கள் என்று உயர்கல்வி அமைச்சர் நோராய்னி அகமட் ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.
இதற்கிடையில், சபா மற்றும் சரவாக் ஆகிய இடங்களில் அமைந்துள்ள பல்கலைக்கழகங்களுக்கு, அந்தந்த மாநில அரசுகள் வகுத்துள்ள நடைமுறைகளின்படி மாணவர்களின் அனுமதி மேற்கொள்ளப்படும்.
தனியார் மற்றும் பொது பல்கலைக்கழகங்களின் புதிய மற்றும் தற்போதுள்ள அனைத்துலக மாணவர்கள், இங்கிலாந்தில் இருந்து வருபவர்களைத் தவிர, ஜனவரி 1- ஆம் தேதிக்குள் நாட்டிற்குள் நுழைய அனுமதிக்கப்படுவார்கள் என்றும் அவர் கூறினார்.
வெளிநாட்டு மாணவர்கள் வந்தவுடன் 10 நாட்கள் கட்டாய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்று நோராய்னி மேலும் கூறினார்.
கொவிட் -19 நிர்ணயிக்கப்பட்ட நிர்வாக நடைமுறைகளிபடி , முகக்கவசங்களை அணிவது மற்றும் கைத்தூய்மியைப் பயன்படுத்துவது உள்ளிட்டவைகள் கல்வி நிறுவனங்களில் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.